June 10, 2023

நார்ட்எஃப்எக்ஸ் (NordFX)-இல் மிகவும் வெற்றிகரமான வர்த்தகர்களின் விருப்பமான வர்த்தகக் கருவிகளில் தங்கம் ஒன்றாகும். இத்தரகு நிறுவனம் மாதாந்திர தரவரிசையை வெளியிட்டு வருகின்றது, அதைப் பார்ப்பதன் மூலம் இதை சுலபமாக உறுதி செய்யலாம். அதன்படி எக்ஸ்ஏயு/யுஎஸ்டி (XAU/USD) இணையை மட்டுமே மையமாக வைத்து ஒரு சிறப்பு மதிப்பாய்வை வழங்குவது பொருத்தமாக இருக்கும்.

எக்ஸ்ஏயு/யுஎஸ்டி (XAU/USD): 2027 வரையிலான வரலாற்று கண்ணோட்டமும் முன்கணிப்பும்1 

தங்கம் உண்மையிலேயே ஒரு பாதுகாப்பான சொத்தா?

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், உலகெங்கிலும் உள்ள முன்னணி மத்திய வங்கிகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதால், இந்த மதிப்புமிக்க உலோகத்தின் விலை வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது, மே 4 அன்று ஒரு டிராய் அவுன்ஸ் $2,080-ஐ எட்டியது. சந்தை பங்கேற்பாளர்கள் தங்களின் மூலதனம் மதிப்பிறக்கத்தில் இருந்து பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையில் தங்கத்தை வாங்குவதற்கு விரைகின்றனர்.

புளூம்பெர்க் நடத்திய ஓர் ஆய்வின்படி, பதிலளித்தவர்களில் ஏறத்தாழ 50% பேர் தங்கத்தை முதன்மையான பாதுகாப்பான சொத்தாகக் கண்டறிந்துள்ளனர் (அமெரிக்க கருவூலப் பத்திரங்கள் இரண்டாவது இடத்தில் உள்ளன, அது 15% வாக்குகள் மட்டுமே பெற்றது). இருப்பினும், தங்கம் உண்மையிலேயே விலை அபாயங்களைத் தடுக்கும் ஒரு பயனுள்ள கருவியா அல்லது இது பரவலாக தவறான கருத்தா?

உதாரணமாக, இதைக் கருத்தில் கொள்ளுங்கள், 2022 மார்ச்சு முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் தங்கத்தின் விலை $2,070-இல் இருந்து $1,616 ஆகக் குறைந்தது, இது கிட்டத்தட்ட 22% சரிவாகும். அந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் பணவீக்கம் 40 ஆண்டு இல்லாத அளவு உச்சத்தை எட்டிய போதிலும் இது நிகழ்ந்தது. அப்படியானால், தங்கம் என்ன வகையான பாதுகாப்புச் சொத்து?

தங்கம் விலையின் வளர்ச்சி

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலைகளின் மாற்றத்தைக் கண்டறிந்தால், பின்வரும் முறையை நாம் கூர்ந்து நோக்குகிறோம். 1900ஆம் ஆண்டில், இந்த மதிப்புமிக்க உலோகத்தின் விலை ஒரு டிராய் அவுன்ஸ் தோராயமாக $20 ஆக இருந்தது.

1914 முதல் 1918 வரையிலான காலகட்டத்தில், முதலாம் உலகப் போருக்கு மத்தியிலும் உடனடியாகவும், விலை சுமார் $35 ஆக உயர்ந்தது. பின்னர், 1930களில், பெரும் மந்தநிலையின் போதும்,  அமெரிக்காவில் நாணய சீர்திருத்தங்களின் விளைவாகவும், ஒரு டிராய் அவுன்ஸ் விலை $20.67 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முழுவதும், இச்சொத்தின் மதிப்பு நிலையாக இருந்தது,  மேலும் பிரெட்டன் வூட்ஸ் அமைப்பின் கீழ் இது $35 ஆக நிர்ணயிக்கப்பட்டது, இது முதலாம் உலகப் போரின்போது இருந்த அதே நிலையாகும்.

1971இல், அமெரிக்கா தங்கத் தரத்தை கைவிட்டது, இது நடப்பு செலாவணி வீதம் மற்றும் தங்கத்தின் விலையில் அதிகரிப்புக்கு வழிவகுத்தது. 1970களின் பிற்பகுதியிலும், 1980களின் முற்பகுதியிலும், புவிசார் அரசியல் பதட்டங்கள், பணவீக்கம், தங்க உற்பத்தியில் ஏற்பட்ட குறைப்பு ஆகியவற்றின் காரணமாக ஒரு டிராய் அவுன்ஸ் விலை $800ஐ தாண்டியது. 1980களில் இருந்து 2000கள் வரை, தங்கத்தின் விலை குறைந்து, ஏறக்குறைய $250 முதல் $500 வரையில் ஏற்ற இறக்கமாக இருந்தது.

2000களின் முற்பகுதியில் இருந்து, புவிசார் அரசியல் நிகழ்வுகள், நிதி உறுதியற்ற தன்மை, பணவீக்க அழுத்தங்கள் ஆகியவற்றின் காரணமாக தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டது. 2020 ஆகஸ்ட்டில், கோவிட்-19 தொற்றுநோய், பொருளாதார நிச்சயமற்ற நிலை ஆகியவற்றின் மத்தியில், தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு டிராய் அவுன்ஸ் $2,000-ஐத் தாண்டியது. எனினும், இந்த உச்சத்தைத் தொடர்ந்து, பொருளாதார மீட்சிக்கான எதிர்பார்ப்புகள், மத்திய வங்கிகளின் பணவியல் கொள்கைகளை இறுக்குதல், வட்டி விகிதங்கள் அதிகரிப்பு, மற்றும் பல்வேறு காரணிகளால் சரிவைச் சந்தித்தது.

2022 மார்ச்சில், $2,000 எதிர்ப்பின் அளவைத் தாண்டிய முயற்சி தோல்வியடைந்தது. இறுதியாக, இந்த ஆண்டு மே மாதம் மூன்றாவது எழுச்சி ஏற்பட்டது.

தங்கத்தின் விலை ஏன் உயர்கிறது

எனவே, தங்கத்தின் மதிப்புக்கு பங்களிப்பது என்ன, மற்றும் அதன் விலை ஏன் உயர்கிறது?

  • அரிதான மற்றும் வரையறுக்கப்பட்ட வழங்கல்: தங்கம் ஒரு அரிய உலோகம், அதனைப் பிரித்தெடுக்கும் அளவு குறைவாக உள்ளது, மேலும் அதற்கு குறிப்பிடத்தக்க முயற்சிகளும் வளங்களும் தேவைப்படுகிறது.
  • நிலைப்புக் காலம் மற்றும் நீண்ட ஆயுள்: தங்கம் தேய்மானத்தையும் அரிப்பையும் அதிக அளவில் எதிர்க்கும். இது காலப்போக்கில் அதன் இயற்பியல் பண்புகளைத் தக்க வைத்துக் கொள்கிறது, இது நீண்டகால சேமிப்பிற்கு ஏற்றது, நகைகள் மற்றும் பல்வேறு தொழில்களில் பயன்படுத்த கவர்ச்சிகரமானதாக அமைகிறது.
  • சேமிப்பின் மதிப்பு: தங்கம் நீண்டகாலமாக சேமிப்பின் மதிப்பாகக் கருதப்படுகிறது. பணவீக்கம், பங்குகள் மற்றும் நாணயங்களின் உறுதியற்ற தன்மை ஆகியவற்றிற்கு எதிராக ஒரு பாதுகாப்பாக, நீண்டகாலத்திற்கு அதன் வாங்கும் சக்தியைப் பாதுகாக்க முடியும்.
  • பணப்புழக்கம் மற்றும் அங்கீகாரம்: தங்கம் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டு ஒரு சொத்தாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதை எளிதாக பணமாக மாற்றலாம் அல்லது வெவ்வேறு நாடுகளிலும் கலாச்சாரங்களிலும் பணம் செலுத்தும் ஊடகமாகப் பயன்படுத்தலாம்.

இந்த காரணிகள் தங்கத்திற்கான விரும்பத்தக்க தன்மைக்கும் தேவைக்கும் பங்களிக்கின்றன, இதனால் அதன் விலையை உயர்த்துகிறது.

தங்கத்தின் விலையை பாதிக்கும் காரணிகள்

தங்கத்தின் விலையை பாதிக்கும் காரணிகள் என்னென்ன என்பதை நாம் ஆராய்வோம். தங்கத்தின் விலைக்கும் இந்தக் காரணிகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக எந்த நேரடித் தொடர்பும் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். சந்தைக் கணிப்புகளும், இந்த காரணிகளின் கலவையும் தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் பங்கு வகிக்கிறது. எடுத்துக்காட்டாக, எக்ஸ்ஏயு/யுஎஸ்டி (XAU/USD)-இன் சமீபத்திய எழுச்சியானது பெடரல் ரிசர்வின் வட்டி விகித உயர்வு சுழற்சியில் தலைகீழாக மாறுவதற்கான எதிர்பார்ப்புகள், சாத்தியமான அமெரிக்க கடன் இயல்புநிலை,  உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளும், அத்துடன் புவிசார் அரசியல், பொருளாதார உறுதியற்ற தன்மை ஆகியவை காரணமாக இருக்கலாம். இப்போது நாம் முக்கியக் காரணிகள் எவை என்பதைக் கண்டறிவோம்:

  • பொருளாதார நிலைமைகள்: ஜிடிபி வளர்ச்சி அல்லது சரிவு, வேலையின்மை, ஒட்டுமொத்த நிதி நிலைத்தன்மை உள்ளிட்ட உலகப் பொருளாதார நிலை தங்கத்தின் விலையை பாதிக்கலாம். சந்தைகளில் நிச்சயமற்ற தன்மை அல்லது மந்தநிலை, உதாரணமாக, ஆபத்து இல்லாத சொத்தாக தங்கத்திற்கான தேவையை அதிகரிக்கலாம்.
  • புவிசார் அரசியல் நிகழ்வுகள்: ஆயுத மோதல்கள், போர்கள், பயங்கரவாதச் செயல்கள், பொருளாதாரத் தடைகள், தேர்தல்கள், மற்றும் பிற காரணங்கள், அரசியல் மற்றும் புவிசார் அரசியல் நிகழ்வுகள், சந்தை உறுதியற்ற தன்மையையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தலாம், இது பாதுகாப்பான புகலிடமாக தங்கத்திற்கான தேவையை அதிகரிக்க வழிவகுக்கும்.
  • பணவீக்கம்: தங்கத்தின் மதிப்பை நிர்ணயிப்பதில் பணவீக்கத்தின் அளவு முக்கியப் பங்கு வகிக்கிறது. பணவீக்கம் உயரும்போது, முதலீட்டாளர்கள் பண மதிப்பிறக்கத்திற்கு எதிராக பாதுகாப்பை நாடுவதால் தங்கத்தின் விலை பொதுவாக அதைப் பின்பற்றுகிறது.
  • மத்திய வங்கிகள்: வட்டி விகிதங்களில் மாற்றங்கள் உட்பட மத்திய வங்கிகள் எடுக்கும் நடவடிக்கைகள் தங்கத்தின் விலையை பாதிக்கலாம். எடுத்துக்காட்டாக, வட்டி விகிதங்கள் குறைவது தங்கத்தின் தேவையை தூண்டலாம், ஏனெனில் அதை வைத்திருப்பது மற்ற சொத்துக்களை விட கவர்ச்சிகரமானதாக மாறும்.
  • நாணய மதிப்பின் மாற்றங்கள்: வெவ்வேறு நாடுகளுக்கு இடையிலான மாற்று விகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் தங்கத்தின் விலையையும் பாதிக்கலாம். தங்கம் உற்பத்தி செய்யும் நாட்டின் நாணயம் மற்ற நாணயங்களுக்கு எதிராக வலுவிழந்தால், அந்த நாணயத்தில் தங்கத்தின் விலை அதிகரித்து, ஏற்றுமதியைத் தூண்டி, தங்கத்தின் தேவையை உயர்த்தும்.
  • முதலீட்டுத் தேவை: முதலீட்டுத் தேவையில் தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்கள் வாங்குதல், எதிர்காலச் சந்தை பரிவர்த்தனைகள் ஆகியவை அடங்கும். ஃபியட் நாணயங்களின் மீதான நம்பிக்கை பலவீனமடையும்போது தேவை பொதுவாக உயரும்.
  • தங்கத்தின் விலையை மதிப்பிடும்போது இந்தக் காரணிகளையும், சந்தை எதிர்பார்ப்புகளின் இடைவினையையும் கருத்தில் கொள்வது முக்கியம்.

முன்கணிப்பு: தங்கம் விலை உயருமா?

முன்கணிப்புகளுக்கு வரும்போது, கிடைக்கக்கூடிய தகவல், பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையில் அவை வெறும் அனுமானங்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். முன்னர் குறிப்பிட்டபடி, தங்கச் சந்தை சிக்கலானது மற்றும் பல காரணிகளின் செல்வாக்கிற்கு உட்பட்டது. எந்தவொரு முன்கணிப்பும் அகநிலை மதிப்பீடுகள், பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் சூழ்நிலைகள், அத்துடன் சந்தை தேவை, விநியோகத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றைப் பொறுத்து மாறலாம். இருப்பினும், சில முன்கணிப்புகள் ஒப்பீட்டளவில் துல்லியமாக நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

2021 செப்டம்பருக்கு முன் செய்யப்பட்ட அத்தகைய முன்கணிப்புகளின் சில எடுத்துக்காட்டுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. 2021 மே-இல், கோல்ட்மேன் சாக்ஸ் ஆய்வாளர்கள் 2024ஆம் ஆண்டுக்குள் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கத்தின் விலை $2,000 ஆக இருக்கும் என்று கணித்துள்ளனர். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பாங்க் ஆஃப் அமெரிக்காவில் உள்ள அவர்களின் ஒத்தநிலையினர் அதே முன்கணிப்பைச் செய்தனர். இந்த எதிர்ப்புத்தன்மையின் தொடுதல் ஒரு ஆண்டிற்கு முன்பே ஏற்பட்டது. எனினும் எக்ஸ்ஏயு/யுஎஸ்டி (XAU/USD) ஆனது இந்த நிலைக்கு மேல் நிலையாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளுமா, அதை எதிர்ப்புத்தன்மைக்கு ஆதரவாக மாற்றுமா என்பதைப் பார்க்க வேண்டும்.

தற்போது, கோல்ட்மேன் சாக்ஸ் வியூக வல்லுநர்கள் $2,200 இலக்கைக் குறிக்கின்றனர். இதற்கிடையில், 2023ஆம் ஆண்டின் இறுதிக்குள் தங்கத்தின் விலை $2,100 ஆகவும், 2024 மார்ச்சுக்குள் $2,200 ஆகவும் உயரக்கூடும் என்று சுவிஸ் நிதி நிறுவனமான யுபிஎஸ் நம்புகிறது. (அவர்களின் முந்தைய கணிப்பு இந்த ஆண்டு $2,400 ஆக இருக்கும் என்று கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது). இதே போன்ற புள்ளிவிவரங்கள் எகனாமிக்ஸ் ஃபோர்காஸ்டிங் ஏஜன்சியின் ஆய்வாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளன, தங்கத்தின் விலை $2,400-ஐ விட அதிகமாக இருக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள், ஆனால் இது 2027-இல் மட்டுமே நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

***

இந்தக் கண்ணோட்டத்தின் தொடக்கத்தில், தங்கம் ஒரு பாதுகாப்புச் சொத்தா என்ற கேள்வியை நாம் எழுப்பினோம். வாரன் பஃபெட் தனது ஆரம்ப அறிக்கைகளில், தங்கத்தில் முதலீடு செய்வது குறித்து சந்தேகத்தை வெளிப்படுத்தினார், இது வருமானத்தை உருவாக்காத ஒரு உற்பத்தியற்ற சொத்து என்று குறிப்பிட்டார். இருப்பினும், விளக்கப்படத்தைப் பார்த்தால், அவருடைய கருத்து தவறானது என்பது தெளிவாகிறது. புகழ்பெற்ற முதலீட்டாளரும் கூட இதை ஒப்புக்கொண்டார், பின்னர் சேமிப்பு மதிப்பின் ஒரு அங்கமாக தங்கத்தின் மீது நேர்மறையான அணுகுமுறையை வெளிப்படுத்தினார். பிரபல நிதியாளர் ஜார்ஜ் சொரெஸ், பணவீக்கம், அரசியல் உறுதியற்ற தன்மை ஆகியவற்றுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் ஒரு பல்வகைச் சொத்தாக தங்கத்தை அங்கீகரித்தார். முதலீட்டு நிறுவனமான பிரிட்ஜ்வாட்டர் அசோசியேட்ஸ் நிறுவனர் ரே டேலியோ, இந்த விலைமதிப்பற்ற உலோகத்தை ஒருவரின் உடைமைப் பட்டியலில் சேர்க்க பரிந்துரைத்தார்.

பெரும்பாலும், அவை அனைத்தும் சரியானவை, மேலும் வரவிருக்கும் எதிர்காலத்தில், தங்கம் முதன்மை மூலதனப் பாதுகாப்பாளராக அதன் பங்கைத் தக்க வைத்துக் கொள்ளும். இருப்பினும், எந்தவொரு முதலீட்டின் செயல்திறனும் அதன் நுழைவுப் புள்ளியைப் பொறுத்தது என்பதை எப்போதும் நினைவில் கொள்வது அவசியம். வர்த்தகத்தின் நேரம் தவறாக தேர்ந்தெடுக்கப்பட்டால், உங்கள் வைப்புத்தொகை குறையத் தொடங்கும். இருப்பினும், தங்கத்தின் விஷயத்தில், எக்ஸ்ஏயு/யுஎஸ்டி (XAU/USD) மீண்டும் உயரும் நிகழ்தகவு பல ஃபியட் கரன்சிகளை விட கணிசமாக அதிகமாக உள்ளது. பின்னடைவுகளைத் தாங்கி, இறுதியில் இலாபத்தை அடைய, நல்ல பண மேலாண்மை, அத்துடன் நேரமும் பொறுமையும் அவசியம்.

 

நார்ட்எஃப்எக்ஸ் (NordFX) பகுப்பாய்வு குழு

 

அறிவிப்பு: இந்தத் தகவல்கள் நிதிச் சந்தைகளில் செயல்படுத்துதவற்கான முதலீட்டு பரிந்துரைகள் அல்லது வழிகாட்டுதல்கள் அல்ல மேலும் வை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. நிதிச் சந்தைகளில் வர்த்தகம் செய்வது ஆபத்தானது மற்றும் டெபாசிட் செய்யப்பட்ட நிதியின் முழுமையான இழப்பை ஏற்படுத்தும்.


« Market Analysis and News

பயிற்சி பெறவும்
சந்தையில் புதியதா? \"தொடங்குதல்\" பகுதியைப் பயன்படுத்தவும். இப்போதே வர்த்தகத்தைத் தொடங்குங்கள்
பயிற்சியைத் தொடங்குங்கள்