July 15, 2023

யூரோ/யுஎஸ்டி: வீழ்ச்சியடைந்த பணவீக்கம் டாலரை நசுக்கியுள்ளது

  • எனவே, டாலர் மதிப்பைக் குறைக்கும் உலகளாவிய செயல்முறையின் தொடக்கத்தில் நாம் அனைவரையும் வாழ்த்தலாம் (அல்லது, மாறாக, வருத்தப்படலாம்). புளூம்பெர்க் அறிக்கையின்படி, யுஎஸ் பணவீக்க விகிதம் 3.0% -ஐ நெருங்கியது, இது ஃபெடரல் ரிசர்வின் இலக்கான 2.0%-ஐ விட வெகு தொலைவில் இல்லை, இது யுஎஸ் பொருளாதாரத்திற்கு ஒரு திருப்புமுனையை நோக்கி நெருங்கி வருவது போல் தெரிகிறது.

    கடந்த வாரம், டாலர் ஒரு வருடத்தில் தேசிய பொருளாதாரப் புள்ளிவிபரங்களில் இருந்து மிக முக்கியமான அழுத்தத்தை எதிர்கொண்டது. ஜூலை 12, புதன்கிழமை வெளியிடப்பட்ட நுகர்வோர் விலைக் குறியீடு (சிபிஐI) ஜூன் மாதத்தில் 0.2% அதிகரிப்பைக் காட்டியது, இது முன்கணிக்கப்பட்ட 0.3%-ஐ விடக் குறைவாக இருந்தது. ஆண்டு குறிகாட்டியானது 4.0% இலிருந்து 3.0% ஆக குறைந்தது, 2021 மார்ச்சுக்குப் பிறகு மிகக் குறைந்த அளவை எட்டியது. முக்கிய பணவீக்கமும் மே மாதத்தில் 5.3% இலிருந்து ஜூன் மாதத்தில் 4.8% ஆக சரிந்தது, இது 5.0% என்ற முன்கணிப்புக்கு எதிராக இருந்தது.

    பணவீக்கத்தில் இத்தகைய நிலையான சரிவின் பின்னணியில், சந்தைப் பங்கேற்பாளர்கள் விலைப்புள்ளிகளில்  இரண்டாவது ஃபெடரல் ரிசர்வ் விகித உயர்வை மறுத்தல், பணவியல் கொள்கையில் உடனடி திருப்பம் ஆகிய இரண்டிற்கும் காரணியாகத் தொடங்கினர். சிஎம்இ குரூப் ஃபெட்வாட்ச் தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் 25-அடிப்படைப் புள்ளி உயர்வுக்குப் பிறகு கட்டுப்பாட்டாளர் மீண்டும் விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்பு 33% இலிருந்து 20% ஆகக் குறைந்துள்ளது. இதன் விளைவாக, பெரும்பாலான நிதிசார் ஆவணங்கள் டாலரின் மீது வெற்றிகரமான தாக்குதலைச் செய்துள்ளன. அதேநேரத்தில், மினியாபோலிஸ் ஃபெடரல் ரிசர்வ் பேங்க்கின் தலைவர் நீல் காஷ்காரி, ரிச்மண்ட் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் சக ஊழியர் தாமஸ் பார்கின், ஃபெடரல் ரிசர்வ் வாரிய உறுப்பினர் கிறிஸ்டோபர் வாலர் ஆகியோர், ”பணவீக்கம் இன்னும் இலக்கு மட்டத்திற்கு மேல் உள்ளது, எனவே ஃபெடரல் ரிசர்வ் அதன் கொள்கையை (QT) தொடர்ந்து கடுமையாக்கத் தயாராக உள்ளது” என்ற அறிக்கைகளை சந்தை முற்றிலும் புறக்கணித்தது.

    டாலர் வீழ்ச்சியின் கதை இதோடு முடிந்துவிடவில்லை. ஜூலை 13, வியாழன் அன்று யுஎஸ் பீரோ ஆஃப் லேபர் ஸ்டேடிஸ்டிக்ஸ், ஜூன் மாதத்தில் உற்பத்தியாளர் விலைக் குறியீடு (PPI) ஆண்டு அடிப்படையில் வெறும் 0.1% மட்டுமே வளர்ந்துள்ளது (முன்கணிப்பு 0.4%, மே மதிப்பு 0.9%) என்று அறிவித்த பிறகு யூரோ/யுஎஸ்டி அதன் மீட்டெடுப்பைத் தொடர்ந்தது.) இதன் விளைவாக, டிஎக்ஸ் டாலர் இன்டெக்ஸ் 100.00 ஆதரவு நிலையைக் கடந்து 2022 ஏப்ரலின் மதிப்புகளுக்குச் சரிந்தது, மேலும் யூரோ/யுஎஸ்டி 2022 பிப்ரவரிக்குப் பிறகு அதன் அதிகபட்ச அளவை எட்டியது, இது 1.1244 ஆக உயர்ந்தது.

    பல சந்தை பங்கேற்பாளர்கள் யுஎஸ் நாணயத்திற்கான சிறந்த நேரம் முடிந்துவிட்டது என்று முடிவு செய்தனர். யுஎஸ் பொருளாதாரம் குறையும், பணவீக்கம் இலக்கு மதிப்புகளை எட்டும், மேலும் ஃபெடரல் ரிசர்வ் அதன் பணவியல் கொள்கையை மென்மையாக்க ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கும். இதன் விளைவாக, 2023 மற்றும் 2024-இன் இரண்டாம் பாதியானது டாலருக்கு எதிராக மற்ற நாணயங்களுக்கு வலுவூட்டும் காலமாக மாறும். இத்தகைய எதிர்பார்ப்புகளின் விளைவாக, ஸ்பாட் யுஎஸ்டி குறியீட்டு எண் 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்தது, மேலும் ஹெட்ஜ் (இடர்காப்பு) நிதிகள் பிரத்தியேகமாக மார்ச்சு மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக யுஎஸ் கரன்சியை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளன.

    டாலருக்கு இந்த வீழ்ச்சியின் ஒரு வாரத்திற்குப் பிறகு, யூரோ/யுஎஸ்டி 1.1228-இல் முடிந்தது. அருகிலுள்ள கால வாய்ப்புகளைப் பொறுத்தவரை, இந்த மேலோட்டத்தை எழுதும் நேரத்தில், ஜூலை 14 மாலை, 30% பகுப்பாய்வாளர்கள் இந்த ஜோடியின் மேலும் வளர்ச்சிக்கு வாக்களித்தனர், 55% பேர் அதன் சரிவுக்கு வாக்களித்தனர், மீதமுள்ள 15% பேர் நடுநிலை நிலைப்பாட்டை எடுத்தனர். டி1-இல் உள்ள போக்கு குறிகாட்டிகள் மற்றும் ஆஸிலேட்டர்களில், 100% பச்சைகளின் பக்கத்தில் உள்ளன, இருப்பினும் ஆஸிலேட்டர்களில் மூன்றில் ஒரு பங்கு ஜோடி அதிகமாக வாங்கப்பட்டதைக் குறிக்கிறது.

    இந்த ஜோடிக்கு அருகிலுள்ள ஆதரவு 1.1200, பின்னர் 1.1170, 1.1090-1.1110, 1.1045, 1.0995-1.1010 மற்றும் 1.0895-1.0925 -இல் அமைந்துள்ளது. காளைகள் சுமார் 1.1245, 1.1290-1.1310, 1.1355, 1.1475 மற்றும் 1.1715 வரை எதிர்ப்பைச் சந்திக்கும்.

    இருட்டடிப்பு காலம் அடுத்த ஃபெடரல் ஓப்பன் மார்க்கெட் கமிட்டி (FOMC) கூட்டத்திற்கு வழிவகுக்கும், அது ஜூலை 26 அன்று நடத்த திட்டமிடப்பட்டது, ஆனால் அது இப்போது  ஜூலை 15 அன்று தொடங்கும். எனவே, வரும் வாரத்தில் ஃபெடரல் ரிசர்வ் அதிகாரிகளிடம் இருந்து எந்த அறிக்கையையும் எதிர்பார்க்க முடியாது. சந்தையைத் தாக்கும் மேக்ரோ பொருளாதாரத் தரவுகளால் மட்டுமே விலைப்புள்ளிகள் பாதிக்கப்படும். ஜூலை 18, செவ்வாய்க்கிழமை அன்று, யுஎஸ் சில்லறை விற்பனை குறித்த தரவு வெளியிடப்படும். ஜூலை 19 புதன்கிழமை, யூரோமண்டலத்தில் பணவீக்கத்தில் (சிபிஐ) என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிவோம். பிறகு ஜூலை 20, வியாழன் அன்று, யுனைடெட் ஸ்டேட்ஸில் வேலையின்மை, உற்பத்தி செயல்பாடு, வீட்டுவசதி சந்தை ஆகியவை பற்றிய தரவு வரும்.  

ஜிபிபி/யுஎஸ்டி: வளர்ச்சிக்கான சாத்தியம் உள்ளது

  • முன்னர் ஜூன் மாத இறுதியில், ஜிபிபி/யுஎஸ்டி மீதமுள்ள தூரத்தை 1.3000க்கு ஒரு சில வாரங்களில் அல்லது நாட்களில் கடக்கக் கூடும் என்று ஊகித்தோம். நாங்கள் சொன்னது சரிதான். தற்போதைய சூழ்நிலையில், பிரிட்டிஷ் பவுண்டு வளர்ச்சிக்கான வாய்ப்பை இழக்கவில்லை: வாரத்தின் உச்சம் 1.3141 என்ற உயரத்தில் பதிவு செய்யப்பட்டது, இது 2022 மார்ச்சு மாத இறுதியில் - ஏப்ரல் தொடக்கத்தில் உள்ள நிலைகளுக்கு ஒத்திருக்கிறது. ஐந்து நாள் காலத்தின் இறுதிக்குறிப்பு 1.3092 என்ற இலக்கில் முடிந்தது. 

    பலவீனமான டாலருடன், யுகே-இன் நிதி அமைப்புமுறை மதிப்பீட்டின் அரையாண்டு அறிக்கை பவுண்டின் வளர்ச்சிக்கு மற்றொரு உந்துதலாக இருந்தது. முக்கிய வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான நீண்டகால சுழற்சியின் பின்னணியில் தேசியப் பொருளாதாரத்தின் மீட்டெடுப்பை இது நிரூபித்தது. பல யுஎஸ் வங்கிகளைப் போல் அல்லாமல், பெரிய யுகே வங்கிகள் அதிக மூலதனத்தை பராமரிக்கின்றன, மேலும் அவற்றின் இலாபம் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மேலும் பல விகித உயர்வுகளை அவை தாங்க முடியும் என்று இது பரிந்துரைக்கிறது. ஆகஸ்டு 3-ம் தேதி நடைபெறும் அதன் அடுத்த கூட்டத்தில், பேங்க் ஆஃப் இங்கிலாந்து (பிஓஇ) மேலும் 50 அடிப்படைப் புள்ளிகள் (bps) 5.50% ஆக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டம் மிகவும் முக்கியமானது என்பதால், சாத்தியமான பொருளாதார பிரச்சினைகளைப் பொருட்படுத்தாமல் அது அவ்வாறு செய்யும். மே மாதத்தில் நாட்டில் நுகர்வோர் பணவீக்கம் (சிபிஐ) 8.7% ஆக இருந்தது (இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில், ஜெர்மனியில் 6.1%, பிரான்சில் 4.5%, ஜப்பானில் 3.2%, யுஎஸ்ஏவில் மே மாதத்தில் 4.0% மற்றும் ஜூனில் 3.0%).

    யுகே தொழிலாளர் சந்தையும் பணவீக்கத்தை மேல்நோக்கி தள்ளுகிறது. வட்டி விகிதம் அதிகரித்த போதிலும் கூட, சமீபத்திய அறிக்கை ஊதிய வளர்ச்சி 6.9% ஆண்டுக்கு துரிதமாக உள்ளது என்று குறிப்பிடுகிறது. கோவிட்-19 தொற்றுநோய்களின்போது ஏற்பட்ட சீர்குலைவைத் தவிர்த்து, இது 2001ஆம் ஆண்டிலிருந்து மிக வேகமான வேகம் ஆகும். மேலும் வேலையின்மை ஊதியத்துடன் உயர்ந்தாலும், அதன் தற்போதைய நிலை 4.0% இன்னும் சரித்திர ரீதியாக குறைவாகவே உள்ளது. ஆம், கடந்த ஆண்டு ஆகஸ்டில் இது குறைவாக இருந்தது - 3.5%, ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் 0.5% மட்டுமே வளர்ச்சி என்பது என்ன? அது ஒன்றும் இல்லை! (அல்லது கிட்டத்தட்ட எதுவும் இல்லை).

    பொதுவாக, எதிர்நோக்கக்கூடிய எதிர்காலத்தில், பேங்க் ஆஃப் இங்கிலாந்து தொடர்ந்து பணவியல் கொள்கையை கடுமையாக்குவதைத் தடுக்கும் பெரிய தடைகள் எதுவும் இல்லை. இதனால், மேலும் விகித உயர்வுகளின் வாய்ப்பு பிரிட்டிஷ் நாணயத்தின் வளர்ச்சிகு உதவிகரமாக இருப்பது தொடரும். மேலும், பல பகுப்பாய்வாளர்களின் கூற்றுப்படி, ஜிபிபி/யுஎஸ்டி, 1.3000 எதிர்ப்பை கடந்து, இப்போது 1.3500 அளவில் தாக்குதலை நோக்கமாகக் கொண்டிருக்கலாம்.

    இருப்பினும், அத்தகைய வளர்ச்சி இப்போதே நடக்கும் என்பது இதன் அர்த்தமல்ல. "ஒரு விதத்தில், பவுண்டு ஏற்கனவே ஏறுமுகத்தில் பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் பின்னணியில் அதிக மதிப்பீட்டைச் சந்தித்துள்ளது, மேலும் டாலரின் தற்போதைய இறங்குமுக போக்கின் கட்டத்திற்கு எதிராக வலுவான முடிவுகளைக் காட்ட வாய்ப்பில்லை. இருப்பினும், வர்த்தகர்கள் இப்போது ஜிபிபி/யுஎஸ்டி-இல் 1.3300 இலக்கு வைப்பார்கள். 1.3000க்கு மேல் இவ்வாரத்தில் முடிவுறலாம்" என்று நெதர்லாந்தின் மிகப்பெரிய வங்கிக் குழுவான ஐஎன்ஜியின் உத்திசார் நிபுணர்கள் நம்புகின்றனர்.

    வரவிருக்கும் வாரத்தில் பவுண்டின் ஒருங்கிணைப்புக்கான சாத்தியக்கூறு கனடாவின் ஸ்கோடியாபேங்கால் பரிந்துரைக்கப்படுகிறது, இது 1.2900-1.3000 மற்றும் 1.3300 பகுதிக்கு மேலும் வளர்ச்சியை நிராகரிக்கவில்லை. சிங்கப்பூரின் யுனைடெட் ஓவர்சீஸ் வங்கியும் ஏறுமுகமான போக்கை ஆதரிக்கிறது. அதன் பொருளாதார வல்லுநர்கள் இவ்வாறு நம்புகிறார்கள், "வலுவான வளர்ச்சி வேகம் ஜிபிபி/யுஎஸ்டி பின்வாங்க வாய்ப்பில்லை என்று கூறுகிறது. மாறாக, வாராந்திர அதிவேக நகரும் சராசரியின் மேல் எல்லையை நோக்கி தொடர்ந்து நகரும் வாய்ப்பு அதிகம். இந்த முக்கிய எதிர்ப்பு நிலை தற்போது 1.3335-இல் உள்ளது."

    எதிர்காலத்திற்கான சராசரி முன்கணிப்புக்கு வரும்போது, தற்போது 25% வல்லுநர்கள் மட்டுமே இந்த ஜோடியின் மேலும் வளர்ச்சிக்கு சாதகமாக கருத்து தெரிவித்துள்ளனர்.  50% எதிர்நிலையை எடுத்துள்ளனர்,  மீதமுள்ள 25% நடுநிலையை பராமரிக்கின்றனர். தொழில்நுட்ப பகுப்பாய்வைப் பொறுத்தவரை, அனைத்து 100% போக்கு குறிகாட்டிகள் மற்றும் ஆஸிலேட்டர்கள் மேல்நோக்கி சுட்டிக்காட்டுகின்றன, இருப்பினும் பிந்தையவற்றில் கால் பகுதி அதிகமாக வாங்கப்பட்ட மண்டலத்தில் உள்ளது. ஜோடி தெற்கு நோக்கி நகர்ந்தால், அது ஆதரவு நிலைகள் மற்றும் மண்டலங்களை சந்திக்கும் - 1.3050-1.3060, பின்னர் 1.2980-1.3000, 1.2940, 1.2850-1.2875, 1.2740-1.2755, 1.2675-1.2695, 1.2570, 1.2435-1.2450, 1.2300-1.2330.  ஜோடியின் எழுச்சியின் விஷயத்தில், அது 1.3125-1.3140, 1.3185-1.3210, 1.3300-1.3335, 1.3425, 1.3605 ஆகிய நிலைகளில் எதிர்ப்பைச் சந்திக்கும்.

    ஜூலை 19, புதன்கிழமை, யுனைட்டெட் கிங்டமின் நுகர்வோர் விலைக் குறியீடு (சிபிஐ) போன்ற முக்கியமான பணவீக்கக் குறிகாட்டியின் மதிப்பு தெரியவரும்போது, காலண்டரில் குறிப்பிடத் தகுந்த வரவிருக்கும் வார நிகழ்வுகள். வாரத்தின் வேலைநாட்களின் முடிவில், ஜூலை 21 வெள்ளிக்கிழமை அன்று, அந்நாட்டில் சில்லறை விற்பனை குறித்த தரவுகளும் வெளியிடப்படும். இந்த புள்ளிவிவரங்கள் பணமாற்று விகிதத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும், ஏனெனில் அவை நுகர்வோர் செலவுகள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார செயல்பாடுகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகின்றன, இவை வட்டி விகிதங்கள் மீதான பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் முடிவுகளில் முக்கிய காரணிகளாகும்.

யுஎஸ்டி/ஜேபிஒய்: யென் முதலீட்டாளர்களை மீண்டும் ஒருமுறை மகிழ்வித்தது

  • தொடர்ச்சியாக இரண்டாவது வாரமாக, யென் முதலீட்டாளர்கள் பொறுமை காத்ததற்காக வெகுமதியைப் பெற்றுள்ளனர். யுஎஸ்டி/ஜேபிஒய் நிலவில் இருந்து பூமிக்கு இறங்குவதை அது தொடர்ந்தது, உள்ளூர் குறைந்தபட்சம் 137.23 ஆக இருந்தது. இதனால், ஜூன் 30 முதல், வெறும் இரண்டே வாரங்களில், யுஎஸ் டாலருக்கு நிகரான ஜப்பானிய கரன்சி (நாணயம்) 780 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.

    டிஎக்ஸ்ஒய் கூடையில் உள்ள மற்ற கரன்சிகளுடன் ஒப்பிடும்போது, யென் முதன்மை பயனாளியாகத் தோன்றுகிறது. இந்த பாதுகாப்பான புகலிட கரன்சியின் முக்கிய அம்சம், யுஎஸ்-இல் மந்தநிலை மற்றும் யுஎஸ் அரசாங்கப் பத்திரங்களில் வருமான வேறுபாடுகளைக் குறைப்பது பற்றிய முதலீட்டாளர் அச்சம் ஆகும். டிரஷரீஸ் மற்றும் யுஎஸ்டி/ஜேபிஒய் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு யாருக்கும் இரகசியமானது அல்ல. அமெரிக்க டிரஷரீஸ் பில்கள் மீதான வருமானம் வீழ்ச்சியடைந்தால், டாலருக்கு எதிராக யென் வளர்ச்சியைக் காட்டுகிறது. கடந்த வாரம், சிபிஐ தரவு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, 10 ஆண்டு கால யுஎஸ் ஆவணங்களின் வருமானம் 3.95% இலிருந்து 3.85% ஆகவும், 2 ஆண்டு ஆவணங்களில் - 4.85% இல் இருந்து 4.70% ஆகவும் சரிந்தது.

    பேங்க் ஆஃப் ஜப்பான் (பிஓஜே) அதன் தீவிர தளர்வான பணவியல் கொள்கையை வரவிருக்கும் மாதங்களில் இறுக்கமாக மாற்றலாம் என்ற ஊகமும் யென்-னுக்கு ஆதரவாக தொடர்கிறது. இந்த விஷயத்தில் அந்நாட்டின் அரசாங்கத்தினாலோ அல்லது பிஓஜே தலைமையினாலோ தெளிவான சமிக்ஞைகள் வழங்கப்படாததால், ஊகங்களைப் பற்றி இங்கு பேசுகிறோம்.

    ஃபிரெஞ்ச் சொசைட்டி ஜெனரலில், ஒரு ஆண்டு காலத்தில், 5 ஆண்டு யுஎஸ் பத்திரங்களின் வருமானம் 2.66% ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது யுஎஸ்டி/ஜேபிஒய் 130.00க்குக் கீழே செல்ல அனுமதிக்கும். அதே நேரத்தில், ஜப்பானிய அரசாங்கப் பத்திரங்களின் (JGBs) வருமானம் தற்போதைய நிலையில் இருந்தால், இந்த ஜோடி 125.00 ஆகக் கூட குறையலாம். டான்ஸ்கே பேங்கின் பொருளாதார வல்லுநர்கள் 6-12 மாத கால எல்லைக்குள் 130.00க்குக் கீழே யுஎஸ்டி/ஜேபிஒய் விகிதம் இருக்கும் என்று முன்கணிப்பு செய்துள்ளனர். பிஎன்பி பாரிபாஸில் உள்ள உத்திசார் நிபுணர்களும் இதேபோன்ற முன்கணிப்புகளைச் செய்துள்ளனர்: அவர்கள் இந்த ஆண்டின் இறுதியில் 130.00 மற்றும் 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் 123.00 என்ற நிலையை இலக்காகக் கொண்டுள்ளனர். இந்தப் பின்னணியில், பல ஹெட்ஜ் நிதிகள் டாலர்களை விற்று யென் வாங்கத் தொடங்கியுள்ளன.

    கடந்த வாரம், யுஎஸ்டி/ஜேபிஒய் 138.75-இல் வடக்கில் ஒரு திருத்தத்திற்குப் பிறகு முடிந்தது. இந்த மதிப்பாய்வின்படி, 45% பகுப்பாய்வாளர்கள் இந்த ஜோடி வரவிருக்கும் நாட்களில் மீண்டும் வளர்ச்சியைத் தொடங்கும் என்று நம்புகிறார்கள். 15% மட்டுமே மேலும் வீழ்ச்சியை ஆதரிக்கின்றனர், மேலும் 40% காத்திருப்பு மற்றும் பார்க்கும் நிலைப்பாட்டை பராமரிக்கின்றனர். டி1 (D1) குறிகாட்டிகள் பின்வருமாறு: 100% ஆஸிலேட்டர்கள் சிவப்பு நிறத்தில் உள்ளன, ஆனால் 10% சிக்னல் அதிகமாக விற்கப்படுகிறது. போக்கு குறிகாட்டிகளில் பச்சை மற்றும் சிவப்பு இடையே சமநிலை 35% முதல் 60% வரை உள்ளது. அருகிலுள்ள ஆதரவு நிலை 138.05-138.30 மண்டலத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து 137.25-137.50, 135.95, 133.75-134.15, 132.80-133.00, 131.25, 130.60, 131.25, 130.20.7.1,219.7.01, நெருங்கிய எதிர்ப்பு 1.3895-1.3905, பின்னர் 139.85, 140.45-140.60, 141.40-141.60, 142.20, 143.75-144.00, 145.15-145.30, 146.85-147.15, 148.85,  இறுதியாக 2022 அக்டோபரில் அதிகபட்சமாக 151.95.

    வரவிருக்கும் வாரத்தில் ஜப்பானிய பொருளாதாரம் தொடர்பான குறிப்பிடத்தக்க பொருளாதார தகவல்கள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை. இருப்பினும், ஜப்பானில் ஜூலை 17 திங்கட்கிழமை விடுமுறை என்பதை வர்த்தகர்கள் கவனிக்க விரும்பலாம்: அந்நாடு கடல் தினத்தை (மரின் டே) கடைபிடிக்கிறது.

கிரிப்டோகரன்சிகள்: கார்ல் மார்க்ஸ் மற்றும் பிடிசி-க்கு $120,000

2023 ஜூலை 17-21க்கான ஃபாரெக்ஸ் மற்றும் கிரிப்டோகரன்ஸிகள் முன்கணிப்பு1

  • கடந்த வாரம் யுஎஸ்-இல் ஈர்க்கக்கூடிய நுகர்வோர் பணவீக்கத் தரவு வெளியான பிறகு, சந்தைகள் ஃபெட்-இன் பணக் கட்டுப்பாட்டை உடனடியாகக் கைவிடுதல் மற்றும் முக்கிய விகிதத்தைக் குறைப்பதை நோக்கி நம்பிக்கை கொண்டன. டாலர் இதற்கு ஒரு கூர்மையான வீழ்ச்சியுடனும், அபாயகரமான நிதிசார் கருவிகள் வளர்ச்சியுடனும் பதிலளித்தது. எஸ்&பி500, டவ் ஜோன்ஸ், நாஸ்டாக் காம்போசைட் ஆகியவற்றின் பங்கு குறியீடுகள் உயர்ந்தன, ஆனால், பிட்காய்ன் உயரவில்லை. பிடிசி/யுஎஸ்டி ஜோடி ஒரு குறுகிய வரம்பில் சிக்கிய பிவோட் பாயின்ட் $30,600 உடன் தொடர்ந்து பக்கவாட்டில் நகர்ந்தது. பங்குகளுடனான நேரடித் தொடர்பு, டாலருடன் அதன் தலைகீழ் தொடர்பு பற்றி அது முற்றிலும் மறந்துவிட்டது போல் தெரிகிறது. ஜூலை 13, வியாழன் அன்று, அமெரிக்கன் பிபிஐ வெளியான பிறகு, பிட்காயின் இன்னும் வடக்கே தடையைக் கடக்க முயன்றது, ஆனால் தோல்வியுற்றது: அடுத்த நாளே அது பக்கவாட்டு சேனலின் எல்லைக்குள் திரும்பியது.

    இது ஏன் நடந்தது? பங்குச் சந்தையுடன் டிஜிட்டல் தங்கம் உயருவதைத் தடுத்தது எது? கிரிப்டோ சந்தையை தீர்மானிக்கும் மூன்று காரணிகளை பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டினாலும், இதற்கு மிகத் தீவிரமான காரணங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

    இவற்றில் முதலாவது மைனிங்கின் குறைந்த இலாபம். அதிகரித்து வரும் கணிப்புச் சிக்கல்பாடு காரணமாக, இது ஒரு வரலாற்று குறைந்தபட்சத்திற்கு அருகில் உள்ளது. மேலும், இது சாத்தியமான புதிய விலை வீழ்ச்சியின் அச்சத்துடன் சேர்ந்துள்ளது. இது மைனர்ஸை (miners) புதிதாக உருவாக்கப்பட்ட டிஜிட்டல் நாணயங்களை (ஒரு நாளைக்கு சுமார் 900 பிடிசி) விற்கத் தூண்டுகிறது, ஆனால் திரட்டப்பட்ட இருப்புகளையும் விற்கிறது. பிட்காய்ன்மேக்ஸின் தரவுகளின்படி, மைனர்ஸ் கடந்த ஆறு ஆண்டுகளில் நாணயங்களின் சாதனை அளவை பரிமாற்றங்களுக்கு மாற்றியுள்ளனர்.

    மைனர்ஸ்க்கு கூடுதலாக, யுஎஸ் அரசாங்கம் விநியோகத்தை அதிகரிப்பதில் பங்களிக்கிறது. ஒரே நாளில், ஜூலை 12 அன்று, அது $300 மில்லியன் மதிப்புள்ள நாணயங்களை கிரிப்டோ பரிமாற்றங்களுக்கு மாற்றியது. மேலும் இது இரண்டாவது எதிர்மறை காரணியாகும். இறுதியாக, மூன்றாவது திவாலான எம்டி.காக்ஸ் (Mt.Gox) பரிமாற்றம் ஆகும், இது அக்டோபர் இறுதிக்குள் வாடிக்கையாளர்களுக்கு அதன் கணக்குகளில் மீதமுள்ள அனைத்தையும் செலுத்த வேண்டும். இது தோராயமாக 135,900 பிடிசி-க்கு சமம், மொத்தம் சுமார் $4.8 பில்லியன். கிரிப்டோகரன்சியில் பணம் செலுத்தப்படும், பின்னர் அது சந்தையில் விற்பனைக்காகவும் ஃபியட்டுக்கான பரிமாற்றத்திற்காகவும் கிடைக்கும்.

    நிச்சயமாக, இவை அனைத்தும் நேர்மறையைச் சேர்க்காது, விநியோகத்தை அதிகரிக்கின்றன, ஆனால் தேவையை அதிகரிக்கவில்லை. இருப்பினும், பிட்காயினின் சராசரி வர்த்தக அளவு தினசரி $12 பில்லியன் தாண்டியதைக் கருத்தில்கொண்டு, குறிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்கள் அச்சுறுத்துவதாகத் தெரியவில்லை. எங்கள் பார்வையில், தற்போதைய பக்கவாட்டு போக்குக்கான முக்கியக் காரணம் நேர்மறைகள் மற்றும் எதிர்மறைகளுக்கு இடையிலான சமநிலையாகும். பிளாக்ராக், இன்வெஸ்கோ, ஃபிடிலிட்டி மற்றும் பிற ஜாம்பவான்களிடமிருந்து ஸ்பாட் பிடிசி-இடிஎஃப்-களைத் தொடங்குவதற்கான விண்ணப்பங்கள் நேர்மறையானவை. யுஎஸ் செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (எஸ்இசி) மூலம் கிரிப்டோ சந்தையில் அதிகரித்து வரும் ஒழுங்குமுறை அழுத்தம் எதிர்மறையானவை ஆகும்.

    ஸ்பாட் பிடிசி-இடிஎஃப்-களுக்கான அனைத்து விண்ணப்பங்களையும் எஸ்இசி முன்பு நிராகரித்துள்ளது என்பதையும், தற்போது அவற்றுக்கு அனுமதி வழங்க ஆர்வமில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, இந்த நிதிக்கான போராட்டம் பல மாதங்களுக்கு இழுக்கப்படலாம். எடுத்துக்காட்டாக, பிளாக்ராக்-இன் விண்ணப்பம் குறித்த இறுதி முடிவு 2023ஆம் ஆண்டின் 3வது காலாண்டின் நடுப்பகுதி வரையில் எதிர்பார்க்கப்பட மாட்டாது, மேலும் 2024 மார்ச்சு நடுப்பகுதிக்குப் பிறகு, அடுத்த பிடிசி பாதியாக குறைப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு வரை இது இருக்கலாம். பாதியாகக் குறைப்பது பிடிசியின் அடுத்தடுத்த வளர்ச்சிக்கு மட்டுமல்ல, முந்தைய வளர்ச்சிக்கும் தூண்டுதலாக இருக்கலாம்.

    ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பேங்கின் பொருளாதார வல்லுனர்களின் கூற்றுப்படி, பிட்காயின் விலை இந்த ஆண்டு $50,000-ஐ விட அதிகமாக இருக்கலாம், மேலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் $120,000-ஐ எட்டலாம். இவ்வங்கி பகுப்பாய்வாளர் ஜெஃப் கென்ட்ரிக்கின் பார்வையில், விலை உயரும்போது, மைனர்கள் குவிக்கும் உத்திக்கு திரும்புவார்கள். ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, அவர்கள் தற்போது அவர்களுடைய புதிய டிஜிட்டல் காய்ன் அனைத்தையும் விற்கிறார்கள். இருப்பினும், பிட்காயின் $50,000-இல் வர்த்தகம் செய்யும்போது, அவற்றின் விற்பனை தற்போதைய 900 காய்ன்களிலிருந்து ஒரு நாளைக்கு 180-270 ஆக குறையும். விநியோகத்தில் இத்தகைய குறைவு அச்சொத்தின் மதிப்பில் மேலும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். பொதுவாக, எல்லாமே கார்ல் மார்க்சின் பொருளாதாரக் கோட்பாட்டின் விநியோகம் மற்றும் தேவை ஆகியவற்றுடன் ஒத்துப்போகின்றன.

    மைனர்ஸ்க்கு கூடுதலாக, நிறுவன முதலீட்டாளர்களும் பிட்காயின்களைக் குவிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஸ்பாட் பிடிசி-இடிஎஃப்கள் மற்றும் பாதியாகக் குறைக்கப்படுவது மட்டுமின்றி,  ஃபெடரல் ரிசர்வின் பணவியல் கொள்கையில் மாற்றம் செய்யப்படும், டாலர் பலவீனமடையும். கிரேஸ்கேல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் சிஇஓ மைக்கேல் சோனென்ஷெய்ன் சமீபத்தில் கூறியது போல், முதல் கிரிப்டோகரன்சி இனி "பாஸிங் ஃபேட்" (மோகம் கடந்தது) அல்ல என்பது தெளிவாகிவிட்டது. "சமீபத்திய செய்திகள் [...] இந்த சொத்து வகையின் பின்னடைவை ஒரு பரந்த பொருளில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, மேலும் பல முதலீட்டாளர்கள் [டிஜிட்டல் தங்கத்தை] ஒரு தனித்துவமான முதலீட்டு வாய்ப்பாகக் கருதுகின்றனர்."

    பகுப்பாய்வாளரும் வர்த்தகருமான மைக்கேல் பிசினோவும் டாலர் கணிசமாகக் குறையத் தயாராக இருப்பதாக நம்புகிறார். இருப்பினும், உலகின் முக்கிய நாணயத்தின் வீழ்ச்சியின் ஒரு அச்சுறுத்தும் காட்சியை அவர் கருத்தில் கொள்ளவில்லை, ஏனெனில் அதன் மாற்று விகிதத்தின் இயக்கவியல் மற்ற வகை நிதி சொத்துக்களை விட மெதுவாக உள்ளது. இருப்பினும், பிஸ்ஸினோ யுஎஸ் டாலரில் ஒரு நிலையான கீழ்நோக்கிய போக்கையும்,  டிஜிட்டல் சொத்துகளுக்கு ஆதரவாக நிதி மறுபகிர்வு செய்யப்படும் என்பதையும் முன்கணிப்பு செய்கிறார். மேக்ரோகிராஃபிக் விளக்கப்படம் அவற்றின் மேல்நோக்கிய போக்கைப் பரிந்துரைக்கிறது, மேலும் யுஎஸ்டி மற்றும் பிடிசி இடையே உள்ள தொடர்பைக் கருத்தில்கொண்டு, முந்தையவற்றின் வீழ்ச்சியானது பிந்தையவற்றின் மதிப்பை அதிகரிப்பதற்கும், அதைத் தொடர்ந்து மற்ற குறிப்பிடத்தக்க கிரிப்டோ சொத்துக்களின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும்.

    "ரிச் டேட், புவர் டேட்" என்ற புகழ்பெற்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி, 2024ஆம் ஆண்டில் பிட்காயின் $120,000 மதிப்பை எட்டும் என்று கூறுகிறார். பிரிக்ஸ் நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) விரைவில் தங்கத் தரத்திற்குச் சென்று தங்கத்தின் ஆதரவுடன் தங்களுடைய சொந்த கிரிப்டோகரன்சியை வெளியிடும் என்ற உண்மையின் அடிப்படையில் பொருளாதார நிபுணர் தனது முன்கணிப்பிற்கு அடிப்படையாகக் கொண்டுள்ளார். இது உலகப் பொருளாதாரத்தில் யுஎஸ் டாலரின் ஆதிக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தி அதன் மதிப்பிழப்பை ஏற்படுத்தலாம். பல பாரம்பரிய நிதி நிறுவனங்கள் தங்களின் விவேகமற்ற முடிவுகள் மற்றும் ஊழலால் எதிர்காலத்தில் திவாலாகிவிடும் என்றும் அவர் எச்சரிக்கிறார். இது சம்பந்தமாக, தங்கம், பிட்காயின் வாங்குவதன் மூலம் உங்கள் பணத்தை பணவீக்கத்தில் இருந்து பாதுகாக்க கியோசாகி பரிந்துரைக்கிறது.

    கிரிப்டோ-நிதி சேவையான மேட்ரிக்ஸ்போர்ட்டின் ஆராய்ச்சித் தலைவரான மார்கஸ் தீலன், ஆரம்பத்தில் மட்டுமல்ல, 2024ஆம் ஆண்டின் இறுதியிலும் இதேபோன்ற புள்ளிவிவரத்தை தெரிவித்தார். அவர் காய்ன்டெஸ்க் உடனான ஒரு நேர்காணலில், முதல் கிரிப்டோகரன்சியின் விலைப்புள்ளிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் $125,000 இலக்கைக் கடக்க முடியும் என்று கூறினார். "ஜூன் 22 அன்று, பிட்காயின் இந்த ஆண்டின் புதிய உயர்வை எட்டியது. இந்த சமிக்ஞை வரலாற்று ரீதியாக இறங்குமுகமான போக்கின் முடிவையும், சந்தைகளின் ஏறுமுகமான போக்கின் தொடக்கத்தையும் குறிக்கிறது," என்று அவர் விளக்கினார்.

    தீலனின் கூற்றுப்படி, பிட்காயினின் விலை 12 மாதங்களில் 123% ஆகவும், ஒன்றரை ஆண்டுகளில் 310% ஆகவும் உயரும். இத்தகைய வளர்ச்சியுடன், இச்சொத்து முறையே $65,539 மற்றும் $125,731 ஆக உயரும். இந்நிபுணரின் முன்கணிப்பு கடந்த காலத்தில் இதே போன்ற சமிக்ஞைகளின் சராசரி இலாபத்தை அடிப்படையாகக் கொண்டது: 2012 ஆகஸ்டு, 2015 டிசம்பர், 2019 மே, 2020 ஆகஸ்டு. (தீலென் வேண்டுமென்றே 18 மாதங்களில் 5,285% வளர்ச்சியுடன் முன்னதைப் புறக்கணித்து, அதை "காவியம்" "மற்றும் "விகிதாசாரமற்றது" என்று அழைத்தார்.).

    இன்னும் குறுகியகால முன்கணிப்பைப் பொறுத்தவரை, துணிகர நிறுவனமான எய்ட்-இன் நிறுவனர் மைக்கேல் வான் டி பாப்பே, பிட்காயின் $41,000க்கு முன்னேறத் தயாராகி வருவதாக நம்புகிறார். இப்பிரபலமான பகுப்பாய்வாளர் முதல் கிரிப்டோகரன்சி விகிதம் மற்றும் ஃபிப்போனாச்சி அளவுகளின் சமீபத்திய வளர்ச்சியில் தனது கருத்தை அடிப்படையாகக் கொண்டார். அவரின் கூற்றுப்படி, "பிடிசி-க்கான முந்தைய ஆண்டு உயர்வானது ஏப்ரல் மாதத்தில் வெற்றிகொள்ளப்பட்டது. மேலும் வர்த்தகர்கள் ஏற்றமான வேகத்தையும் நிலைகளையும் உருவாக்குவதால் இப்போது அதிக உயர்வைக் காண்கிறோம்." "ஏற்றச் சுழற்சி என்று அழைக்கப்படும் ஏற்றத்தைத் தொடர, பிட்காயின் புதிய மற்றும் தெளிவான உயர்வை அடைய வேண்டும்" என்று மைக்கேல் வான் டி பாப்பே விளக்குகிறார். "ஃபிப்போனாச்சி அளவைப் பயன்படுத்தி மேலும் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளைத் தீர்மானிக்க அனுமதிக்கும் பல அம்சங்கள் உள்ளன. இப்போது நான் $41,000க்கு ஒரு கூர்மையான உயர்வு உள்ளது என்று கூறுவேன்."

    "இரண்டு காட்சிகள் உள்ளன: தற்போதைய அதிகபட்சத்திற்கு மேல் உயர்வு, அதைத் தொடர்ந்து சில ஒருங்கிணைப்பு மற்றும் புதிய வளர்ச்சிக்கு முன் பின்வாங்கல். அல்லது தற்போதைய நிலைகளில் ஒருங்கிணைப்பு, பின்னர் வரும் மாதங்களில் வளர்ச்சியை துரிதப்படுத்தும். பிட்காயினுக்கு, இது மிகவும் நிலையான நடத்தை. பின்னர் நாங்கள் $41,000 அல்லது $42,500க்கு செல்வோம்" என்று பகுப்பாய்வாளர் கணிக்கின்றார்.

    ஜூலை 14, வெள்ளிக்கிழமை மாலை இந்த மதிப்பாய்வை எழுதும்போது, பிடிசி/யுஎஸ்டி சுமார் $30,180 வர்த்தகம் செய்யப்படுகிறது. கிரிப்டோ சந்தையின் மொத்த சந்தை மூலதனம் சிறிது அதிகரித்து $1.198 டிரில்லியன் (ஒரு வாரத்திற்கு முன்பு $1.176 டிரில்லியன்) ஆக உள்ளது. கிரிப்டோ ஃபியர் அண்ட் கிரீட் குறியீடு கிரீட் மண்டலத்தில் உள்ளது, மற்றும் 60 புள்ளிகளில் உள்ளது (ஒரு வாரத்திற்கு முன்பு 55 புள்ளிகள்).

 

நோர்ட்எஃப்எக்ஸ் (NordFX) பகுப்பாய்வுக் குழு

 

அறிவிப்பு: இந்தத் தகவல்கள் நிதிச் சந்தைகளில் செயல்படுத்துதவற்கான முதலீட்டு பரிந்துரைகளோ அல்லது வழிகாட்டுதல்களோ அல்ல மேலும் வை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. நிதிச் சந்தைகளில் வர்த்தகம் செய்வது ஆபத்தானது மற்றும் டெபாசிட் செய்யப்பட்ட நிதியின் முழுமையான இழப்பை ஏற்படுத்தும்.


« Market Analysis and News

பயிற்சி பெறவும்
சந்தையில் புதியதா? \"தொடங்குதல்\" பகுதியைப் பயன்படுத்தவும். இப்போதே வர்த்தகத்தைத் தொடங்குங்கள்
பயிற்சியைத் தொடங்குங்கள்