July 25, 2023

ஜார்ஜ் சோரோஸ் என் பெயர் உலகம் முழுவதும் பலவிதமான உணர்ச்சிகளைத் தூண்டும் ஒரு பெயர். சிலருக்கு, அவர் வணிக புத்திசாலித்தனத்தையும் தர்மசிந்தனைக் கொள்கைகளையும் அடையாளப்படுத்துகிறார்; மற்றவர்களுக்கு, அரசியல் தந்திரோபாயங்களைக் கையாளுபவராகத் தெரிகின்றார். ஆனால் 8.5 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கட்டுப்படுத்தும் இந்த மனிதர் உண்மையில் யார்?

இளமைப்பருவம்

1930 ஆகஸ்டு 12ஆம் நாள் ஹங்கேரியின் புடாபெஸ்டில் ஜார்ஜ் சோரோஸ் பிறந்தார், அவர் ஒரு யூத குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர்கள், திவாடர், எர்செபெட் சோரோஸ் ஆகியோர், அவரை ஒப்பீட்டளவில் செல்வச் செழிப்பில் வளர்த்தனர், ஆனால் இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்துடன் அவர்களது வாழ்க்கை வியத்தகு முறையில் மாறியது. இனப்படுகொலையின் அச்சுறுத்தலை எதிர்கொண்ட சோரெஸ் குடும்பம் நினைத்துப்பார்க்க முடியாத கஷ்டங்களைத் தாண்டியது. அவரது குடும்பத்தை காப்பாற்ற, தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று ஒரு தவறான கதையை திவாடர் உருவாக்கி, இந்த கூற்றை நிரூபிக்க போலி ஆவணங்களை வாங்கினார். இந்த அனுபவம் இளம் ஜியார்ஜியை ஆழமாக பாதித்தது. விஷயங்களை "அவை எப்படி இருக்க முடியுமோ, அப்படியே அல்ல" என்று காணும் திறன் அந்தக் காலங்களில் வெளிப்பட்டது என்று அவர் பின்னர் வலியுறுத்தினார்.

போருக்குப் பிறகு, சோரோஸ் இலண்டனுக்குச் சென்றார், அங்கு அவர் இலண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் (எல்எஸ்இ)-இல் பயின்றார். அங்கே, அவர் புகழ்பெற்ற தத்துவஞானி கார்ல் பாப்பரின் படைப்புகளை படித்தார், இது சமூகம் மற்றும் பொருளாதாரம் பற்றிய அவரது முன்னோக்குகளை ஆழமாக வடிவமைத்தது.

பேங்க் ஆஃப் இங்கிலாந்தை வென்ற மனிதர்: ஜார்ஜ் சோரோஸின் பில்லியன் டாலர் கதை1

நிதித்துறையில் பணி

1952-இல் எல்எஸ்இ-இல் பட்டம் பெற்ற பிறகு, சோரோஸ் இலண்டனில் உள்ள சிங்கர் & ஃபிரைட்லேண்டரில் தனது பணியைத் தொடங்கினார். 1956ஆம் ஆண்டில், அவர் யுஎஸ்-க்கு சென்று, நியூயார்க்கில் வால் ஸ்ட்ரீட்டில் உள்ள ஐரோப்பிய பத்திரங்களில் நிபுணத்துவம் பெற்ற எஃப்.எம். மேயர் என்ற முதலீட்டு வங்கியில் பணியாற்றத் தொடங்கினார். 1959-இல், அவர் அர்ன்ஹோல்ட் & எஸ்.பிளைஷ்ரோடர்-இல் சேர்ந்தார், அங்கு அவர் துணைத் தலைவர் பதவிக்கு உயர்ந்தார். 1963 வாக்கில், அவர் தனது முதல் முதலீட்டு நிதியத்தை 'டபுள் ஈகிள்' என்ற பெயரில் நிறுவினார், அது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, 'சோரோஸ் ஃபண்ட் மேனேஜ்மென்ட்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த கட்டத்தில், சோரோஸ் அர்ன்ஹோல்ட் & எஸ்.பிளைஷ்ரோடரை விட்டு தனது சொந்த நிதியத்தில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

அவரது வழிகாட்டுதலின் கீழ், 'சோரோஸ் ஃபண்ட் மேனேஜ்மென்ட்' கணிசமாக வளர்ந்தது, அது 'குவாண்டம் ஃபண்ட்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது, மேலும் முதலீட்டு உலகில் அவரது செல்வத்திற்கும் புகழுக்கும் அடித்தளமாக அமைந்தது. 1992 செப்டம்பரில், ஜார்ஜ் சோரோஸ் பிரிட்டிஷ் பவுண்டை 'உடைத்தபோது' தனது வணிக வெற்றியின் உச்சத்தை அடைந்தார். இப்போது 'கருப்பு புதன்' என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கை, சோரோஸ் பில்லியன் டாலர்களை இலாபத்தில் ஈட்டியது, மேலும் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. அவர் 'பேங்க் ஆஃப் இங்கிலாந்தை உடைத்த மனிதர்' என்ற புனைப்பெயரைப் பெற்றார், அவர் வணிகத் துறையில் மட்டுமின்றி, பொது மக்களிடையேயும் புகழ் பெற்றார்.

அந்த நேரத்தில், ஐரோப்பா ஐரோப்பிய நாணய அமைப்புமுறைக்குள் மாற்று விகிதங்களின் அமைப்பான ஐரோப்பிய செலாவணி விகித பொறிமுறையின் (European Exchange Rate Mechanism (ERM) கீழ் இயங்கியது. பங்குபெறும் நாடுகளின் நாணயங்கள் ஒரு குறிப்பிட்ட ஏற்ற இறக்கப் பகுதியில் வைக்கப்படுவதை இந்த அமைப்புமுறை உள்ளடக்கியது. ஜெர்மன் மார்க்குக்கு எதிராக குறிப்பிட்ட வரம்புகளுக்குள் அதன் விகிதத்தை பராமரிக்க ஒரு நிபந்தனையுடன், பிரிட்டிஷ் பவுண்டு ஸ்டெர்லிங் இந்த அமைப்புமுறையில் சேர்க்கப்பட்டது.  இருப்பினும், பெருகிவரும் பொருளாதார அழுத்தங்கள், நாணய சந்தை ஊகங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில், இந்த நிறுவப்பட்ட விகிதத்தை பராமரிப்பது பிரச்சினையாக மாறியது.

இந்தச் சூழ்நிலையில் ஊகங்களுக்கு ஒரு வாய்ப்பை சோரோஸ் கண்டார். அவரது குவாண்டம் ஃபண்ட் தீவிரமாக பவுண்டுகளை விற்கத் தொடங்கியது, அதன் மூலம் கரன்சியின் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. இது 'பேர் ரெய்டு' என்று அழைக்கப்பட்டது – சோரோஸும், அவரது குழுவும் தங்களுக்குச் சொந்தமில்லாத கரன்சியை விற்றுக் கொண்டிருந்தனர், பின்னர் அதை குறைந்த விலையில் வாங்கலாம் என்றும் விலை வேறுபாட்டின் மூலம் இலாபம் கிடைக்கும் என்றும் நம்பினர். 

1992 செப்டம்பர் 16, 'கருப்பு புதன்' அன்று, வட்டி விகித உயர்வுகள், கரன்சி சந்தை தலையீடுகள் மூலம் கரன்சியை ஆதரிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பவுண்டின் மதிப்புக் குறைப்பு, இஆர்எம் இலிருந்து வெளியேறுதல் ஆகியவற்றை அறிவிக்க வேண்டிய கட்டாயம் பேங்க் ஆஃப் இங்கிலாந்துக்கு ஏற்பட்டது. இது பிரிட்டிஷ் நாணயத்தின் மதிப்பில் சரிவுக்கு வழிவகுத்தது - பவுண்டு ஜெர்மனிக்கு எதிராக 15%,  யுஎஸ் டாலருக்கு எதிராக 25% குறைந்தது. ஜார்ஜ் சோரோஸ் ஒரே இரவில் சுமார் $1 பில்லியன் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது, இது அவரை வரலாற்றில் மிகவும் பிரபலமான கரன்சி ஊக வணிகர்களில் ஒருவராக ஆக்கியது, மேலும் குவாண்டம் ஃபண்ட், மிகவும் வெற்றிகரமான ஹெட்ஜ் நிதிகளில் ஒன்றாகும்.  

சோரோஸும் குவாண்டம் ஃபண்டும் எப்படி வருமானம் ஈட்டுகின்றனர்

சோரோஸின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று அவரது 'பிரதிபலிப்பு கோட்பாடு' ஆகும், இது சந்தைகளை நிலையற்ற, கணிக்க முடியாத அமைப்புமுறைகளாக பகுத்தறிவற்ற முறையில் செயல்படுகிறது. எனவே, அவர் குறுகியகால விலை ஏற்ற இறக்கங்கள், சந்தை ஏற்றத்தாழ்வுகளில் இருந்து இலாபம் பெற முயற்சிக்கும் ஊக மற்றும் நடுவர் உத்திகளை தீவிரமாகப் பயன்படுத்துகிறார். பங்குகள், பத்திரங்கள், பொருட்கள், கரன்சிகள், வழித்தோன்றல் நிதிக் கருவிகளை வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு முதலீட்டுக் கருவிகள் மற்றும் நுட்பங்களை தீவிரமாகப் பயன்படுத்தி சோரோஸும் அவரது குவாண்டம் ஃபண்டும் வருவாய் ஈட்டுகின்றனர். உதாரணமாக, சோரோஸ் 1990களின் பிற்பகுதியில் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்தார், மேலும் 2000ஆம் ஆண்டில் 'டாட்காம் பபுள்' வெடிப்பதற்கு முன்பு இந்த பங்குகளில் இருந்து வெளியேறி லாபம் பெற்றார்.

இருப்பினும், முதலீட்டில் எப்போதும் ஆபத்து உள்ளது, மேலும் மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்கள் கூட தவறு செய்யலாம். ஜார்ஜ் சோரோஸ் கூட தவறு செய்துள்ளார். சில வர்த்தகங்கள் அவருக்கும் குவாண்டம் ஃபண்டுக்கும் குறிப்பிடத்தக்க இலாபத்தைக் கொண்டு வந்தன, மற்றவை கணிசமான இழப்புகளுக்கு வழிவகுத்தன. ஆயினும்கூட, சோரோஸ் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான, செல்வாக்குமிக்க முதலீட்டாளர்களில் ஒருவராக தனது அந்தஸ்த்தை தக்கவைத்துக் கொண்டார், மேலும் அவரது உத்திகளும் அணுகுமுறைகளும் முழு நிதி உலகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 

'பேங்க் ஆஃப் இங்கிலாந்தை உடைத்த மனிதர்' என்பது முதல் கொடைவள்ளல் என்பது வரை

ஜார்ஜ் சோரோஸ் ஒரு புகழ்பெற்ற வணிகர் மட்டுமல்ல. அவரது நலன்கள் பரந்தவை, மேலும் வால் ஸ்ட்ரீட்டிற்கு அப்பால் நீண்டுள்ளன. அவர் தனது மகத்தான செல்வத்தைப் பயன்படுத்தி பல்வேறு தொண்டு திட்டங்களுக்கு ஆதரவாக நன்கொடைகளை அளித்து தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 1979ஆம் ஆண்டில், சோரோஸ் ஓபன் சொசைட்டி அறக்கட்டளைகளை (ஓஎஸ்எஃப்) நிறுவினார், இது உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த அறக்கட்டளை உலகெங்கிலும் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் திட்டங்களை செயல்படுத்துகிறது. அத்தகைய திட்டங்களின் சில வகைகள் வருமாறு:

கல்வி மற்றும் அறிவியல்: பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு உதவுவதற்கான திட்டங்கள் முதல் கல்வி ஆராய்ச்சி மற்றும் பல்கலைக்கழகங்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள் வரை பலவிதமான முயற்சிகளை இந்த அறக்கட்டளை ஆதரிக்கிறது. 1991-இல், சோரோஸ் புடாபெஸ்டில் மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தை நிறுவினார்.

மனித உரிமைகள் பாதுகாப்பு: புலம்பெயர்ந்தோர், அகதிகள், எல்ஜிபிடி+சமூகம் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் உரிமைகள் உட்பட மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் போராடும் அமைப்புகள் மற்றும் இயக்கங்களுக்கு ஓஎஸ்எஃப் நிதியளிக்கிறது.

நீதி மற்றும் சட்ட அமலாக்கம்: ஊழலை எதிர்த்துப் போராடுதல், சட்ட அமைப்புமுறையின் செயல்பாட்டை மேம்படுத்துதல், குற்றவியல் நீதி ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை இந்த அறக்கட்டளை ஆதரிக்கிறது.

நலவாழ்வு பாதுகாப்பு: எச்ஐவி/எய்ட்ஸ், காசநோய், போதைமருந்துப் பழக்கம் போன்ற மிக முக்கியமான சில உடல்நலப் பிரச்சினைகளைச் சமாளிப்பதில் ஓஎஸ்எஃப் தீவிரமாகப் பங்கேற்கிறது.

ஊடகச் சுதந்திரம்: தணிக்கை அல்லது துன்புறுத்தலை எதிர்கொள்ளும் சுதந்திரமான ஊடகங்கள்,  பத்திரிகையாளர்கள் ஆகியோரை இந்த அறக்கட்டளை ஆதரிக்கிறது.

முன்னர் குறிப்பிட்டது போல், ஓஎஸ்எஃப்-இன் குறிக்கோள்களில் ஒன்று, மனித உரிமைகளைப் பாதுகாத்தல், மாற்றப் பொருளாதாரங்களில் அல்லது மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளான அரசியல் மாற்றங்களில் செல்வாக்கு செலுத்த முயலுவதில் இருந்து பாதுகாக்கும் சிவில் சங்கங்களை ஆதரித்தல் ஆகும். இந்த வழியில்  சோரோஸின் தீவிரமான பணி அவரை பல்வேறு சதி கோட்பாடுகளின் மையமாக மாற்றியது. இந்த பில்லியனர் பல்வேறு நாடுகளில் வண்ணப் புரட்சிகள்,  வெகுஜன போராட்டங்களை ஏற்பாடு செய்ததாக அடிக்கடி குற்றம் சாட்டப்படுகிறார். இருப்பினும், பல ஊடகங்கள் குறிப்பிடுவது போல், சோரோஸ் மற்றும் அவரது அறக்கட்டளை இந்தப் புரட்சிகளை நேரடியாகக் கட்டுப்படுத்தவில்லை அல்லது ஒழுங்கமைக்கவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரை, அவை பெரும்பாலும் சர்வாதிகார அரசாங்கங்கள் அல்லது அரசியல் சக்திகளிடமிருந்து வருகின்றன, அவை ஓஎஸ்எஃப்-இன் செயல்பாடுகளை தங்கள் அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதுகின்றன.

உதாரணமாக, 2018ஆம் ஆண்டில், விக்டர் ஓர்பன் அரசின் தொடர்ச்சியான அழுத்தம், விரோதம் காரணமாக ஓஎஸ்எஃப் ஹங்கேரியில் அதன் செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இந்த அறக்கட்டளை தேசிய பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகவும் குற்றம் சாட்டியது. ஜார்ஜியாவில் "ரோஜா புரட்சி" (2003), உக்ரைனில் "ஆரஞ்சுப் புரட்சி" (2004-2005), மற்றும் கிர்கிஸ்தானில் "துலிப் புரட்சி" (2005) ஆகியவை சோரோஸுடன் அடிக்கடி தொடர்புடைய நிகழ்வுகளாகும்.

சோரோஸ் எழுதிய புத்தகங்களும் அவர் எச்சரித்தை விஷயங்களும்  

ஜார்ஜ் சோரோஸ் ஒரு நிதியாளர், கொடைவள்ளல் மட்டுமின்றி, ஆர்வமுள்ள வர்ணனையாளர், சிந்தனையாளர், எழுத்தாளர் ஆவார். அவர் பல புத்தகங்கள், ஏராளமான கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் ஆகியவற்றை  எழுதியுள்ளார். அவற்றில், அவர் அரசியல், சமூகப் பிரச்சினைகளுடன் பொருளாதார மற்றும் நிதிப் போக்குகளின் பகுப்பாய்வை ஒருங்கிணைத்து, அவரது படைப்புகளை தொழில் வல்லுநர்களுக்கும் பரந்த பார்வையாளர்களுக்கும் சுவாரஸ்யத்துடன் அளிக்கிறார்.

அவரது புத்தகங்களில் குறிப்பிட்டவை வருமாறு:

– "தி அல்கெமி ஆஃப் ஃபைனான்ஸ்", 1987 - இந்தப் புத்தகத்தில், சோரோஸ் நிதி மற்றும் பொருளாதாரம் பற்றிய தனது கருத்துக்களை கோடிட்டுக் காட்டுகிறார், இதில் அவரது "பிரதிபலிப்பு கோட்பாடும்" அடங்கும். பத்திரங்களை வாங்குதல் மற்றும் விற்றல் பற்றிய முடிவுகள் எதிர்கால விலைகளின் எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்டவை என்று இந்த கோட்பாடு தெரிவிக்கிறது. இந்த எதிர்பார்ப்புகள் முற்றிலும் உளவியல் சார்ந்தவை, எனவே, அவை ஒருவரின் சொந்த நலனுக்காக (ஊடகங்கள் மூலம், முதன்மையாக) செல்வாக்கு செலுத்தப்படலாம், மற்றும் செலுத்தப்பட வேண்டும்.

– "அண்டர்ரைட்டிங் டெமாக்ரசி", 1991 - இந்தப் புத்தகத்தில், கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு கிழக்கு ஐரோப்பாவில் ஜனநாயகத்திற்கு மாறுவதற்கு ஆதரவாக தனது எண்ணங்களையும் அனுபவத்தையும் சோரோஸ் பகிர்ந்துள்ளார்.

– "தி கிரைஸிஸ் ஆஃப் குளோபல் கேப்பிடலிஸம்: ஓபன் சொசையிட்டி என்டேன்ஜர்டு", 1998 - இந்த படைப்பில், சோரோஸ் 1997-1998 நிதி நெருக்கடி மற்றும் உலகிற்கு அதன் விளைவுகளை பகுப்பாய்வு செய்கிறார்.

- "தி டிரேஜிடி ஆஃப் தி ஈரோப்பியன் யூனியன்: டிஸ்இன்டகிரேஷன் ஆர் ரிவைவல்?", 2014 - இப்புத்தகம் சோரோஸ் மற்றும் பத்திரிகையாளர் கிரிகோர் ஷ்மிட் இடையேயான உரையாடல் ஆகும், இதில் அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம், உலக அரசியலில் இரஷ்யாவின் பங்கு ஆகியவை பற்றி விவாதிக்கின்றனர்.

சோரோஸின் படைப்புகளில் இருந்து மேற்கோள்கள் பொருளாதாரம், அரசியல், சமூகம் ஆகியவை பற்றிய அவரது சிந்தனை செயல்முறைகளையும் பார்வைகளையும் பிரதிபலிக்கின்றன. அவருடைய மிகவும் பிரபலமான சில மேற்கோள்கள் வருமாறு:

- "நான் ஒரு முரண்பாடாக இருக்கவும் கூட்டத்திற்கு எதிராக செல்லவும் பயப்படவில்லை."

- "சந்தை விலைகள் எப்போதும் தவறானவை, அவை எதிர்காலத்தைப் பற்றிய ஒரு சார்புடைய பார்வையை முன்வைக்கின்றன."

- "சந்தைகள் நமது கூட்டு உள்ளுணர்வின் பிரதிபலிப்பாகும், ஆனால் அவை சரியானவை அல்ல."

- "நம்பிக்கையுடன் ஒரு சிறிய பதவியைக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை".

- "நான் பணக்காரன், ஏனென்றால் நான் எப்போது தவறு செய்கிறேன் என்று எனக்குத் தெரியும்."

- "மிகவும் சிக்கலான அமைப்புமுறையில், பிழைக்கான அதிக இடம் உள்ளது".

- "நிதிச் சந்தைகள், அவற்றைக் கணிக்க நாம் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், எப்போதும் ஆச்சரியங்கள் நிறைந்ததாகவே இருக்கும்."

- "மற்றவர்களுக்கு, தவறாக இருப்பது அவமானம்; எனக்கு, என் தவறுகளை அங்கீகரிப்பது பெருமைக்குரியது."

- "நான் நல்லது செய்யத் தேர்ந்தெடுத்தேன், ஏனென்றால் அது எனக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது."

- "விஷயங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை தவறாகப் புரிந்துகொள்வதும் தவறாக சித்தரிப்பதும்தான் அரசியலில் பல தவறுகளுக்கு ஆதாரமாக இருக்கிறது.

– "முதலீடு பொழுதுபோக்காக இருந்தால், நீங்கள் வேடிக்கையாக இருந்தால், நீங்கள் பணம் எதுவும் சம்பாதிக்க முடியாது. நல்ல முதலீடு சலிப்பை ஏற்படுத்துகிறது."

- "நீங்கள் சொல்வது சரியா தவறா என்பது முக்கியமல்ல, நீங்கள் சரியாக இருக்கும்போது எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள், தவறாக இருக்கும்போது எவ்வளவு இழக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்."   


« Useful Articles
பயிற்சியைத் தொடங்குங்கள்