August 19, 2023

யூரோ/யுஎஸ்டி: டாலரை எது பலப்படுத்துகிறது மற்றும் அதை எது பலவீனப்படுத்த முடியும்

  • கடந்த வாரம் யுஎஸ் கரன்சி அதன் ஏற்றத்தை தக்கவைத்துக் கொண்டது. ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டியின் (எஃப்ஓஎம்சி) யுஎஸ் ஃபெடரல் ரிசர்வ் ஜூலை கூட்டத்தின் குறிப்புகள் ஆகஸ்டு 16 புதன்கிழமை வெளியிடப்பட்டது, மேலும் பணவியல் கொள்கை இறுக்கம் அடைவதற்கான சாத்தியக்கூறுகளை அவை தெரிவிக்கின்றன.

    இக்குறிப்புகள் வெளியிடப்படுவதற்கு முன்பு, சந்தை செயற்பாட்டாளர்கள் மத்திய வட்டி விகிதம் 5.5%-இல் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று விவாதித்தனர். இருப்பினும், ஆவணத்தின் உள்ளடக்கம் வெளிப்படுத்தப்பட்டதும், இந்த விகிதத்தை இன்னும் எவ்வளவு அதிகரிக்கலாம் என்று விவாதங்கள் மாறியது. தற்போதைய பொருளாதார சூழ்நிலை எதிர்பார்த்தபடி பணவீக்கத்தில் குறிப்பிடத்தக்க குறைவைக் காணாது என்று பல எஃப்ஓஎம்சி  உறுப்பினர்கள் குறிப்புகளில் வெளிப்படுத்தினர். இந்த கருத்துப்போக்கு மத்திய வங்கி மற்றொரு விகித உயர்வைக் கருத்தில்கொள்ள வழி வகுக்கிறது. இதன் விளைவாக, 2023ஆம் ஆண்டில் வட்டி விகிதம் 5.75% அல்லது அதற்கும் அதிகமாக உயரும் வாய்ப்பு 27% இலிருந்து 37% ஆக உயர்ந்துள்ளது, இது டாலரின் நிலையை வலுப்படுத்துகிறது.

    யுஎஸ் டாலரை உயர்த்தும் மற்ற காரணிகளில் பத்திரச் சந்தையின் சாதகமான நிலை, யுஎஸ் பொருளாதாரத்தின் வலுவான ஆரோக்கியம் ஆகியவை அடங்கும். நல்ல சில்லறை விற்பனை புள்ளிவிவரங்கள் ஃபெடரல் ரிசர்வ் பேங்க் ஆஃப் அட்லாண்டாவை அதன் 3வது காலாண்டு ஜிடிபி முன்கணிப்பை திருத்தி 5.0% இலிருந்து 5.8% ஆக உயர்த்தியது. ரியல் எஸ்டேட் சந்தையும் நம்பிக்கைக்குரிய அறிகுறிகளைக் காட்டுகிறது: மாதாந்திர வழங்கப்பட்ட கட்டுமான அனுமதிகள் 0.1% உயர்ந்துள்ளன. மேலும், புதிய வீடுகளின் கட்டுமானம் 3.9% அதிகரித்து, 1.452 மில்லியன் அலகுகளை எட்டியது, இது கணிக்கப்பட்ட 1.448 மில்லியனைத் தாண்டியது. ஆகஸ்டு 15ஆம் தேதி வெளியிடப்பட்ட சில்லறை விற்பனை புள்ளிவிவரங்கள் டாலர் குறியீட்டை (DXY) மேலும் ஆதரித்தன, ஜூலை மாதத்தில் நுகர்வோர் செயல்பாடு 0.7% அதிகரித்துள்ளது: எதிர்பார்க்கப்பட்ட 0.4% மற்றும் முந்தைய 0.2% எண்ணிக்கையை விஞ்சியது. ஒட்டுமொத்தமாக, இந்தத் தரவுப் புள்ளிகள் யுஎஸ் பொருளாதாரம் ஒரு மந்தநிலைக்குள் நுழைவதற்கான அபாயத்தைக் குறைத்துக் காட்டுகின்றன, இது பணக் கட்டுப்பாடு கட்டத்தின் தொடர்ச்சியைக் குறிக்கிறது. கூடுதலாக, அதிகரித்து வரும் எண்ணெய் விலைகள், கட்டுப்பாட்டாளர்களை அடுத்தடுத்த விகித உயர்வுகளை நோக்கித் தள்ளலாம், இது மற்றொரு பணவீக்க அலையைத் தூண்டும்.

    மறுபுறம், யுஎஸ் வங்கித் துறையில் இந்நிலைமை டாலருக்கு சவால்களை ஏற்படுத்தலாம். மினியாபோலிஸ் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் நீல் கஷ்காரி, மார்ச்சு மாதத்தில் தொடங்கிய நெருக்கடி, பல பெரிய வங்கிகளின் திவால் நிலைக்கு இட்டுச் சென்றது, அது இன்னும் முடிவடையவில்லை என்று நம்புகிறார். ஃபெடரல் ரிசர்வ் தொடர்ந்து வட்டி விகிதங்களை உயர்த்தினால், அது வங்கிகளின் செயல்பாடுகளை கணிசமான அளவில் சிக்கலாக்கும் மற்றும் புதிய திவால்நிலையைத் தூண்டும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த முன்னோக்கு ஃபிட்ச் மதிப்பீடுகளில் உள்ள பகுப்பாய்வாளர்களால் எதிரொலிக்கப்படுகிறது. அவர்களின் கணிப்புகள் ஜேபி மோர்கன் சேஸ் அண்ட் கோ போன்ற ஜாம்பவான்கள் உட்பட பல யுஎஸ் வங்கிகளின் மதிப்பீடுகளைக் குறைக்கும் சாத்தியக்கூறுகளைக் கூட கருதுகின்றன.

    கோல்ட்மேன் சாக்ஸின் உத்திசார் நிபுணர்கள் ஃபெடரல் ரிசர்வ் 2024ஆம் ஆண்டின் 2வது காலாண்டில் முக்கிய விகிதத்தைக் குறைப்பதை மட்டுமே பரிசீலிக்கக்கூடும் என்று நம்புகிறார்கள். இந்த நடவடிக்கைக்கான சாத்தியமான தூண்டுதலாக பணவீக்க விகிதம் 2.0% இலக்கு மட்டத்தில் நிலைநிறுத்தப்படலாம். இருப்பினும், கோல்ட்மேன் சாக்ஸ், கட்டுப்பாட்டாளரின் செயல்கள் கணிக்க முடியாதவையாகவே இருக்கின்றன என்று ஒப்புக்கொள்கிறது, அதாவது, இந்த விகிதம் இன்னும் நீண்டகாலத்திற்கு உச்ச நிலைகளில் இருக்கும். ஒட்டுமொத்தமாக, சிஎம்இ ஃபெட்வாட்ச் டூல்-படி, 68% சந்தை பங்கேற்பாளர்கள் 2024 மே மாதத்திற்குள், இவ்விகிதம் குறைந்தது 25 அடிப்படைப் புள்ளிகளால் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

    யூரோ மண்டலத்தின் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, ஆகஸ்டு 16ஆம் தேதி வெளியிடப்பட்ட தரவு, 2023ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டில் 0.3% (காலாண்டில் காலாண்டில்) வளர்ச்சி அடைந்துள்ளதாகக் காட்டுகிறது. இந்த எண்ணிக்கை கணிப்புகளுடன் சரியாக ஒத்துப்போகிறது, மேலும் 1வது காலாண்டின் வளர்ச்சி விகிதத்துடன் பொருந்துகிறது. ஆண்டு அடிப்படையில், ஜிடிபி வளர்ச்சி 0.6% ஆக இருந்தது, இது முன்கணிப்புகள், முந்தைய காலாண்டின் எண்கள் ஆகிய இரண்டிற்கும் ஒத்துப்போகிறது. ஆகஸ்டு 18 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட பணவீக்க புள்ளிவிவரங்களும் ஆச்சரியம் அளிக்கவில்லை. அவை சந்தை எதிர்பார்ப்புகள், முந்தைய புள்ளிவிவரங்கள் ஆகிய இரண்டிற்கும் பொருந்தின. ஜூலை மாதத்தில், முக்கிய நுகர்வோர் விலைக் குறியீடு (சிபிஐ) 5.5% (ஆண்டுக்கு ஆண்டு) மற்றும் -0.1% (மாதத்திற்கு மாதம் அடிப்படையில்) பதிவு செய்யப்பட்டது.

    இத்தகைய நிலையான சுமாரான பொருளாதார செயல்பாட்டிற்கு மத்தியில், யூரோ தொடர்ந்து கீழ்நோக்கிய அழுத்தத்தை எதிர்கொள்கிறது. வரவிருக்கும் குளிர்காலத்தில் ஐரோப்பாவில் ஏற்படக்கூடிய எரிபொருள் நெருக்கடி, ஈரோப்பிய சென்ட்ரல் பேங்கின் (ஈசிபி) பணவியல் கொள்கையைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை ஆகியவை இதற்கு பங்களிக்கும் காரணிகளாகும்.

    ஐந்து நாள் வர்த்தக காலத்தை 1.0947-இல் தொடங்கி, யூரோ/யுஎஸ்டி 1.0872-இல் முடிந்தது. ஆகஸ்டு 18 மாலை வரை, இந்த மதிப்பாய்வு எழுதப்பட்டபோது, 50% பகுப்பாய்வாளர்கள் இந்த ஜோடிக்கு மிக நெருங்கிய வருங்காலத்தில் உயர்வு ஏற்படும் என்று கணித்துள்ளனர், 35% பேர் டாலருக்கு ஆதரவாக உள்ளனர், மீதமுள்ள 15% பேர் நடுநிலை நிலைப்பாட்டை பராமரிக்கின்றனர். டி1 காலவரையறையில் ஆஸிலேட்டர்களைப் பொறுத்தவரை, 100% யுஎஸ் கரன்சியை நோக்கிச் சாய்ந்துள்ளது, ஆனால் அவற்றில் 25% ஜோடி அதிகமாக விற்கப்பட்டதைக் குறிக்கிறது. போக்கு குறிகாட்டிகள் 85% தெற்கே சுட்டிக்காட்டுகின்றன, மீதமுள்ள 15% வடக்கு நோக்கி உள்ளது. இந்த ஜோடிக்கு அருகிலுள்ள ஆதரவு நிலைகள் 1.0845-1.0865 வரம்பில் உள்ளன, அதைத் தொடர்ந்து 1.0780-1.0805, 1.0740, 1.0665-1.0680, 1.0620-1.0635, 1.0525. காளைகள் 1.0895-1.0925 வரம்பிலும், பின்னர் 1.0985, 1.1045, 1.1090-1.1110, 1.1150-1.1170, 1.1230, 1.1275-1.1290, 1.1355, 1.1475, 1.1715 ஆகியவற்றிலும் எதிர்ப்பை சந்திக்கும்.

    அடுத்த வாரம், ஆகஸ்டு 24 முதல் 26 வரை நடைபெறும் ஜாக்சன் ஹோல்-இல் முக்கிய மத்திய வங்கிகளின் தலைவர்களின் கருத்தரங்கில் கவனம் செலுத்தப்படும். ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல், தற்போதைய விகித உயர்வின் உடனடி முடிவைக் குறிப்பிட்டால் கூட ஆகஸ்டு 25 அன்று அவர் ஆற்றிய உரையில், டிஎக்ஸ்ஒய் (டாலர் குறியீடு) கீழ்நோக்கி மாறக்கூடும். இருப்பினும், ஈசிபி தலைவர் கிறிஸ்டின் லகார்ட் உட்பட, மற்ற மத்திய வங்கிகளின் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்து இக்கரன்சி ஜோடியின் நகர்வு இருக்கும் என்பது தெளிவாகிறது.

    ஆகஸ்டு 22 மற்றும் 23ஆம் தேதிகளில் யுஎஸ் தொழிலாளர் சந்தை தரவு வெளியிடுதல் வாரத்தின் மற்ற குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் அடங்கும். ஆகஸ்டு 23 புதன்கிழமை, யுனைட்டெட் ஸ்டேட்ஸ், ஜெர்மனி மற்றும் யூரோ மண்டலத்திற்கான வணிக நடவடிக்கை குறிகாட்டிகள் (பிஎம்ஐ) வெளியிடப்படும். கூடுதலாக, ஆகஸ்டு 24, வியாழன் அன்று, நீடித்தப் பொருட்கள் ஆர்டர்கள், யுஎஸ்-இல் வேலையின்மை பற்றிய புள்ளிவிவரங்கள் ஆகியவை கிடைக்கும்.

ஜிபிபி/யுஎஸ்டி: பிஓஇ-இன் உறுதியின்மை - பவுண்டிற்கு ஒரு பேரழிவு

  • கடந்த இரண்டரை வாரங்களாக ஜிபிபி/யுஎஸ்டி 1.2620-1.2800 வரம்பிற்குள் ஊசலாடுகிறது, காளைகளோ கரடிகளோ தெளிவான மேல்நிலையை நிறுவவில்லை. பேங்க் ஆஃப் இங்கிலாந்து (பிஓஇ) சமீபத்தில் வட்டி விகிதங்களை உயர்த்திய போதிலும், பவுண்டிற்கு ஏற்ற வேகம் மழுப்பலாகவே உள்ளது.

    ஒரு தீவிரமான பணவியல் கொள்கை இறுக்கமானது, மந்தநிலையின் விளிம்பில் இருக்கும் இங்கிலாந்தின் ஏற்கனவே பலவீனமான பொருளாதாரத்தை மேலும் சீர்குலைக்கும் என்று சந்தை பங்குதாரர்கள் இடையே அதிகரித்து வரும் கவலை உள்ளது. ஜூலையில், வேலையின்மை விகிதம் 0.2% அதிகரித்து, 4.2% ஆக இருந்தது. மேலும் கவலைக்குரிய வகையில், இளைஞர்களின் வேலையின்மை 0.9% அதிகரித்து, 11.4% இலிருந்து 12.3% ஆக உயர்ந்துள்ளது. கூடுதலாக, முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது வேலையின்மை நலன்களைக் கோருபவர்களின் எண்ணிக்கை 25K அதிகரித்துள்ளது. இந்த வேலையின்மை அதிகரிப்புக்கு 2021-இல் தொடங்கப்பட்ட வணிக திவால் அலைகள் காரணமாக இருக்கலாம். இந்த போக்கு 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு முழுமையான முடுக்கத்தைக் கண்டது, 1980களின் பிற்பகுதியில் ஏற்பட்ட நெருக்கடி மற்றும் 2008 நிதியச் சரிவின்போது மட்டுமே பொருந்திய நிலைகள் காணப்பட்டன.

    ஆகஸ்டு 18 அன்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (ஓஎன்எஸ்) வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஜூலை மாதத்திற்கான யுகே சில்லறை விற்பனை 1.2% குறைந்துள்ளது, இது முந்தைய மாதத்தில் காணப்பட்ட 0.6%-ஐ விட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும். ஆண்டு அடிப்படையில், ஜூன் மாதத்தில் காணப்பட்ட 1.6% குறைவுடன் ஒப்பிடுகையில், 3.2% குறைந்து இருந்தது.

    ஆகஸ்டு 16 அன்று வெளியிடப்பட்ட பணவீக்கத் தரவு (சிபிஐ) ஆண்டுக்கு ஆண்டு (YoY) 7.9% இலிருந்து 6.8% ஆகக் குறைந்தாலும், பணவீக்கம் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக உள்ளது என்பதைக் குறிக்கிறது. மேலும், மைய விகிதம் 6.9%-இல் நிலையாக உள்ளது. எரிபொருளின் விலை உயர்வு மேலும் பணவீக்க உயர்வுக்கு வழிவகுக்கும்.

    இதற்கு பதிலாற்றும் வகையில் பேங்க் ஆஃப் இங்கிலாந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சந்தை உறுதியாக நம்புகிறது. மத்திய வங்கி இந்த ஆண்டு மட்டுமின்றி 2024ஆம் ஆண்டிலும் விகிதங்களை அதிகரிக்க வேண்டும். இருப்பினும், காமர்ஸ்பேங்க்கின் பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரைப்பது போல், வரவிருக்கும் வாரங்களில், பொருளாதாரத்தை அதிகமாக பாதிக்கும் என்ற அச்சத்தில், பிஓஇ பணவீக்க அபாயங்களைச் சமாளிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டில் தடுமாற்றமாக உள்ளது என்ற எண்ணம் சந்தைக்கு வந்தால், அது பவுண்டிற்கு பேரழிவு தாக்கங்களை ஏற்படுத்தும்.

    ஆகஸ்டு 18, வெள்ளிக்கிழமை ஜிபிபி/யுஎஸ்டி 1.2735-இல் முடித்தது. வருங்காலத்திற்கான நிபுணர்களின் முன்கணிப்பு வருமாறு: பவுண்டிற்கு 60% ஏறுமுகமான போக்கிற்கும், 20% இறங்குமுகமான போக்கையும்,  மீதமுள்ள 20% நடுநிலை நிலைப்பாட்டையும் தேர்ந்தெடுத்தனர். டி1 ஆஸிலேட்டர்களில், 50% சிவப்பு நிறத்தில் உள்ளன, இது ஒரு இறங்குமுகமான போக்கைக் குறிக்கிறது, மற்ற 50% நடுநிலையான சாம்பல் நிறத்தில் உள்ளன. போக்கு குறிகாட்டிகளுக்கு, சிவப்பு மற்றும் பச்சை விகிதம் 60% முதல் 40% வரை உள்ளது, இது ஏறுமுகப் போக்கின் பக்கத்திற்கு சாதகமாக உள்ளது.

    இந்த ஜோடி கீழ்நோக்கி நகர்ந்தால், அது 1.2675-1.2690, 1.2620, 1.2575-1.2600, 1.2435-1.2450, 1.2300-1.2330, 1.2190-1.2210, 1.2085, 1.1960, 1.1800 ஆகியவற்றில் ஆதரவு நிலைகளையும் மண்டலங்களையும் சந்திக்கும். 1800 ஜோடி மேல்நோக்கி நகர்ந்தால், 1.2800-1.2815, 1.2880, 1.2940, 1.2980-1.3000, 1.3050-1.3060, 1.3125-1.3140, 1.3185-1.3210, 1.3300-1.3335, 1.3425, 1.3605 ஆகியவற்றில் எதிர்ப்புநிலையைச் சந்திக்கும்.

    மேக்ரோ எகனாமிக் தரவுகளின் அடிப்படையில், ஆகஸ்டு 23 புதன்கிழமை ஐரோப்பா, யுஎஸ் மட்டுமின்றி இங்கிலாந்திற்கும் "பிஎம்ஐ நாள்" ஆக இருக்கும், ஏனெனில் பிரிட்டிஷ் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் வணிக நடவடிக்கை குறிகாட்டிகள் வெளியிடப்படும். மேலும், நிச்சயமாக, ஜாக்சன் ஹோல்-இல் நடைபெறும் ஆண்டு கருத்தரங்கத்தைப் பற்றி எவரும் மறக்க முடியாது.

யுஎஸ்டி/ஜேபிஒய்: எதிர்பார்க்கும் கரன்சி தலையீடுகள்

  • எஃப்ஓஎம்சி குறிப்புகளின் வெளியீடு, 2008ஆம் ஆண்டிலிருந்து காணப்படாத நிலைகளுக்கு 10-ஆண்டு யுஎஸ் கருவூலங்களின் வருமான உயர்வு யுஎஸ்டி/ஜேபிஒய்-ஐ இன்னும் அதிகமாகச் சென்று 146.55-ஐ எட்டியது. ஜப்பானின் எம்யுஎஃப்ஜி பேங்கின் பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளபடி, "டாலரின் வலுவூட்டல் யுஎஸ்டி/ஜேபிஒய்-ஐ ஒரு ஆபத்து மண்டலத்திற்குத் தள்ளியுள்ளது, அங்கு அதன் மேல்நோக்கி நகர்வதைத் தடுக்கும் தலையீட்டின் ஆபத்து அதிகரித்து வருகிறது." டச் பேங்கிங் குரூப் ஐஎன்ஜி-இன் சக ஊழியர்கள் இந்த ஜோடி இப்போது கரன்சி தலையீடுகளின் பிரதேசத்தில் இருப்பதாக ஒப்புக்கொள்கிறார்கள். "இருப்பினும்," "ஜப்பானிய அதிகாரிகளை எச்சரிக்கத் தேவையான ஏற்ற இறக்கம் இதில் இல்லை." என்று ஐஎன்ஜி நம்புகிறது.

    நிதி அமைச்சகம் (எம்ஓஎஃப்) கடந்த செப்டம்பரில் 145.90க்கு மேல் யுஎஸ்டி/ஜேபிஒய்-இல் தலையிட்டதை நினைவில் கொள்ளவும். ஆனால் தற்போது, நிதி அமைச்சகமோ அல்லது பேங்க் ஆஃப் ஜப்பானோ (பிஓஜே) உள்நாட்டு கரன்சியைப் பாதுகாப்பதில் அவசரப்படவில்லை. யுஎஸ், யூரோமண்டலம், இங்கிலாந்து ஆகியவற்றில் பணவீக்கம் சரிவில் உள்ளது (வெவ்வேறு விகிதங்களில் இருந்தாலும்), அதற்கு மாறாக ஜப்பானில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. ஆகஸ்டு 18 வெள்ளிக்கிழமை அன்று, நாட்டின் புள்ளியியல் பணியகம் ஜூலைக்கான தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டை (சிபிஐ) வெளியிட்டது, இது 3.3% ஆக இருந்தது, அதேசமயம் 2.5% (ஆண்டுக்கு ஆண்டு) எதிர்பார்க்கப்பட்டது.

    காமர்ஸ்பேங்க் பகுப்பாய்வாளர்கள் நாட்டின் ஜிடிபி அதிகரித்துக் கொண்டிருந்தாலும், யென் மதிப்பை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை. (பூர்வாங்க தரவு 0.8% மற்றும் முந்தைய விகிதமான 0.9% உடன் ஒப்பிடும்போது, இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி 1.5% (ஆண்டுக்கு ஆண்டு) இருந்ததைக் குறிக்கிறது). மாறாக, தற்போதைய நிலைமைகளின் கீழ், நிதி அமைச்சகம் சரிவைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், யென் மேலும் பலவீனமடையக்கூடும் என்ற கவலைகள் உள்ளன. "பேங்க் ஆஃப் ஜப்பான், நிதி அமைச்சகம் ஆகியவை ஒருவேளை யுஎஸ் வட்டி விகிதங்கள் மீண்டும் குறையத் தொடங்கியவுடன் நிலைமை மாறும் என்று நம்புகின்றன" என்று காமர்ஸ்பேங்க் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். "அந்த நேரத்தில் டாலர் பலவீனமடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், அந்த தருணத்திற்கு இன்னும் சிறிது காலம் ஆகும். அதுவரை நிதி அமைச்சகம் அதன் தலையீடுகளால் சாதிக்கும் ஒரே விஷயம் அதற்குள் ஏதாவது செய்து காலத்தை நீட்டிக்கவேண்டும் என்பதே. எங்கள் பார்வையில், அதற்கு எதிராகப் போகிறது, இப்போது நிலவும் காற்று யென்-ஐ வலுப்படுத்துவதில் வெற்றியடையாது. இது தற்காலிகமாக வேலை செய்யக்கூடும், ஆனால் அது நிச்சயமில்லை."

    இருப்பினும், ஒரு பலவீனமான யென் ஒரு கட்டத்தில் ஜப்பானிய அதிகாரிகளின் உடனடி நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்று சந்தை பங்கேற்பாளர்கள் பெருகிய முறையில் கவலைப்படுகின்றனர். ஐஎன்ஜி பரிந்துரைத்தபடி, ஜப்பானிய கரன்சியின் அதிக விற்பனையான நிலை, தலையீடுகளின் அச்சுறுத்தல் ஆகியவை யுஎஸ்டி/ஜேபிஒய்-இல் ஏதேனும் இறங்குமுகமான திருத்தங்களை அதிகப்படுத்தும். இதுபோன்ற ஒரு திருத்தத்தைத் தொடர்ந்து, சுமாரான ஒன்று என்றாலும், இந்த ஜோடி கடந்த வாரம் 145.37 என்ற அளவில் முடிந்தது.

    நெருங்கிய காலக் கண்ணோட்டத்தைப் பொறுத்தவரை, நிபுணர்களின் சராசரி முன்கணிப்பு பின்வருமாறு: பெரும்பான்மையானவர்கள் (60%) டாலர் வலுவடையும் என்று எதிர்பார்க்கிறார்கள், மேலும் யுஎஸ்டி/ஜேபிஒய் அதன் மேல்நோக்கிய பாதையைத் தொடரும் என்று எதிர்பார்க்கிறார்கள். மீதமுள்ள 40% இறங்குமுகத் திருத்தத்தை எதிர்பார்க்கிறார்கள். டி1 ஆஸிலேட்டர்களில், முழுமையாக 100% பச்சை நிறத்தில் உள்ளது, இருப்பினும் 20% அதிகமாக வாங்கப்பட்ட நிலைகளைக் குறிக்கிறது. போக்கு குறிகாட்டிகளுக்கு, 80% பச்சை நிறத்திலும், 20% சிவப்பு நிறத்திலும் உள்ளன. அருகிலுள்ள ஆதரவு நிலை 144.50 மண்டலத்தில் அமைந்துள்ளது, அதைத் தொடர்ந்து 143.75-144.04, 142.90-143.05, 142.20, 141.40-141.75, 140.60-140.75, 139.85, 138.95-139.05, 138.05-138.30, 137.25-137.50. உடனடி எதிர்ப்பு 145.75-146.10 ஆகவும், பின்னர் 146.55, 146.90-147.15, 148.45, 150.00, இறுதியாக, 2022 அக்டோபர் நிலையில் அதிகபட்சமாக 151.95 ஆகவும் உள்ளது.

    டோக்கியோ பிராந்தியத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீடு (சிபிஐ) ஆகஸ்டு 25 வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்படும். ஜப்பானிய பொருளாதாரத்தின் நிலை தொடர்பான வேறு குறிப்பிடத்தக்க தரவு வெளியீடுகள் வரவிருக்கும் வாரத்தில் திட்டமிடப்படவில்லை.

கிரிப்டோகரன்சிகள்: எலோன் மஸ்க் "மக்களின் டாலரை" எப்படி வீழ்ச்சியடையச் செய்தார்

2023 ஆகஸ்டு 21-25க்கான ஃபாரெக்ஸ் மற்றும் கிரிப்டோகரன்ஸிகள் ஆகியவற்றின் முன்கணிப்பு1

  • ஜூலை 14 முதல், முதன்மை கிரிப்டோகரன்சி, ஒட்டுமொத்த டிஜிட்டல் சொத்து சந்தை ஆகியவை, வலுவடைந்து வரும் டாலரின் அழுத்தத்தில் உள்ளன. பிடிசி/யுஎஸ்டி அளவிலான எடை டாலரை நோக்கிச் செல்லும்போது, பிட்காயின் இலகுவாக மாறும். உண்மையில், ஆகஸ்டு 11 முதல் 15 வரை, பிடிசி/யுஎஸ்டி ஜோடியின் விளக்கப்படம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி மெல்லியதாக நீண்டு, $29,400 பிவோட் புள்ளியைத் தழுவிக்கொண்டது, கிரிப்டோகரன்ஸிகளைப் பற்றி சந்தை முற்றிலும் மறந்துவிட்டது போல் தோன்றியது.

    கிளாஸ்நோட் பகுப்பாய்வாளர்கள் அந்த நேரத்தில் டிஜிட்டல் தங்கச் சந்தை தீவிர அக்கறையின்மை, சோர்வின் ஒரு கட்டத்தை எட்டியுள்ளது என்று குறிப்பிட்டனர். வாரத்தின் தொடக்கத்தில் ஏற்ற இறக்க அளவீடுகள் சாதனை குறைந்த அளவினை அடைந்தன, பாலிஞ்சர் பேண்ட்ஸ் பரவல் 2.9% ஆகக் குறைந்தது. இத்தகைய குறைந்த அளவுகள் வரலாற்றில் இரண்டு முறை மட்டுமே காணப்பட்டன: 2016 செப்டம்பர், 2023 ஜனவரி. "முதலீட்டாளர் அக்கறையின்மையை முறியடிக்க சந்தை நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கிளாஸ்நோட் நிபுணர்கள் முடித்தனர்.

    முதலீட்டாளர்கள் விரும்பும் திசையில் அவசியமில்லை என்றாலும், அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முதல் நகர்வு ஆகஸ்டு 16 அன்று மாலை பிடிசி/யுஎஸ்டி $28,533 ஆக குறைந்தது. முன்னர் குறிப்பிட்டபடி, ஃபெடரல் ரிசர்வின் ஜூலை கூட்டத்தின் குறிப்புகளை வெளியிடுவதன் மூலம் இந்த சரிவு தூண்டப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த மிதமான பின்னடைவு அதன் முடிவல்ல. அடுத்த குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஆகஸ்டு 17 முதல் 18 வரை இரவு நிகழ்ந்தது. இது படுகுழியில் ஒரு சரிவு என்று விவரிக்கப்படலாம், பிட்காயின் குறைந்தபட்சமாக $24,296-ஐ எட்டியது. தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெளியிடப்படாத ஆவணங்களை மேற்கோள் காட்டி, எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் அதன் பிடிசி ஹோல்டிங்ஸை ரொக்கமாக்கியதாகவும், கிரிப்டோகரன்சியில் $373 மில்லியன் மார்க்டவுன் (குறைத்து மதிப்பிடல்) பெற்றதாகவும் தெரிவித்ததை அடுத்து இந்த வீழ்ச்சி ஏற்பட்டது. இருப்பினும், ஸ்பேஸ்எக்ஸ் இந்த காயின்களை எப்போது விற்றது என்பதை அறிக்கை குறிப்பிடவில்லை. இருப்பினும், சந்தையில் பீதியைத் தூண்டுவதற்கு இதுபோன்ற விவரங்கள் தேவையில்லை.

    மேலும் பல நிகழ்வுகளும் விலைப்புள்ளிகளுக்கு அழுத்தம் சேர்த்தன. உதாரணமாக, ஒரு யுஎஸ் ஃபெடரல் நீதிமன்றம் ரிப்பிளுக்கு எதிரான செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனின் (எஸ்இசி) மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டது, ஒரு மாதத்திற்கு முன்பு ரிப்பிளுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட ஒரு பகுதி முடிவின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. முக்கிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளுக்கு எதிராக யுஎஸ் அதிகாரிகளின் தொடர்ச்சியான சட்ட உரிமைகோரல்கள் மற்றொரு எதிர்மறையான தாக்கமாக உள்ளது.

    பிட்காயினின் தலைகீழ் வீழ்ச்சி முழு கிரிப்டோ சந்தையையும் கீழே இழுத்து, திறந்த விளிம்பு நிலைகளை பெருமளவில் ரொக்கமாக்க வழிவகுத்தது. காயின்கிளாஸின் கூற்றுப்படி, 24 மணிநேர இடைவெளியில், 175,000க்கும் மேற்பட்ட சந்தை பங்கேற்பாளர்களின் நிலைகள் ரொக்கமாக்கப்பட்டன, இதன் விளைவாக வர்த்தகர்களின் இழப்பு $1 பில்லியனைத் தாண்டியது.

    ஈத்தரீயத்துக்கான முதல் எதிர்கால இடிஎஃப்களை உருவாக்குவதற்கு எஸ்இசி ஆயத்தம் செய்வதாக புளும்பெர்க்கின் அறிக்கை இல்லாமல் இருந்திருந்தால் நிலைமை மிகவும் மோசமாக இருந்திருக்கும். இதன் விளைவாக, பிடிசி/யுஎஸ்டி மற்றும் ஈடிஎச்/யுஎஸ்டி ஆகியவை மேல்நோக்கி சரி செய்யப்பட்டு, இரண்டு மாதங்களுக்கு முன்பு காணப்பட்ட நிலைக்குத் திரும்பியது. ஒரு நினைவூட்டலாக, ஜூன் 15 அன்று பிளாக்ராக் ஒரு ஸ்பாட் பிட்காயின் இடிஎஃப்களை நிறுவ விண்ணப்பத்தை தாக்கல் செய்த பிறகு சந்தை உயர்ந்தது. இருப்பினும், சமீபத்திய சரிவுக்குப் பிறகு, அந்த ஆதாயங்கள் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டன.

    மேலும் சரிவுகளை நாம் எதிர்பார்க்க வேண்டுமா? குறிப்பிடத்தக்க வகையில், டேவ்_தி_வேவ் என்ற புனைப்பெயரைக் கொண்ட ஒரு வர்த்தகர் மற்றும் பகுப்பாய்வாளர், அவரது துல்லியமான முன்கணிப்புகளுக்குப் பெயர் பெற்றவர், 2023ஆம் ஆண்டின் இறுதியில், பிட்காயின் அதன் மடக்கை வளர்ச்சி வளைவின் (Logarithmic Growth Curve (LGC) கீழ் எல்லைக்கு வீழ்ச்சியடையக்கூடும் என்று எச்சரித்திருந்தார், இது தோராயமாக 38% வீழ்ச்சியைக் குறிக்கிறது. இந்த ஆண்டு உச்சம். அத்தகைய சூழ்நிலையில், கீழ்நிலை சுமார் $19,700 இருக்கும்.

    மற்றொரு பிரபல வர்த்தகர், டோன் வைஸ், பிடிசி-இல் $25,000க்கு (ஏற்கனவே நிகழ்ந்தது) வீழ்ச்சியை நிராகரிக்கவில்லை. இந்த நிலையில், மேலும் நீண்டகால சரிவுக்கான அதிக வாய்ப்பு இருப்பதாக வைஸ் நம்புகிறார். அவரது கண்ணோட்டத்தில், முதன்மையான கிரிப்டோகரன்சி "விளிம்பில் தத்தளிக்கிறது, மேலும் விஷயங்கள் மந்தமாக இருப்பது தெரிகிறது." "விலை உடனடியாக - அதாவது இந்த மாதமே, மாற்றி அமைக்கப்பட வேண்டும். இன்னும் ஒரு மாத சரிவை எங்களால் தாங்க முடியாது; இல்லையெனில், சந்தையில் பீதி உருவாகும். பிடிசி $20,000க்குக் கீழே வர்த்தகம் செய்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். மைனர்ஸ் தங்கள் பங்குகளை ஏற்றிவிடலாம். இது மிகவும் ஆபத்தானது" என்று வைஸ் எச்சரிக்கிறார்.

    பிடிசி-இன் விலை $12,000 ஆகக் குறைந்துள்ளது என்ற கூற்றுக்களை மற்றொரு நிபுணரான துணிகர முயற்சி நிறுவனமான எய்ட்-இன் நிறுவனர் மைக்கேல் வான் டி பாப்பே மறுத்துள்ளார் என்பதை நாங்கள் முன்பு குறிப்பிட்டுள்ளோம். இருப்பினும், அவரது பார்வையில், பிட்காயின் செயலில் வளர்ச்சிக்குத் திரும்ப, அது $29,700 அளவைத் தாண்ட வேண்டும். இக்காயினின் அடுத்த குறிப்பிடத்தக்க இலக்கு $40,000 ஆகும்.

    மைக்கேல் வான் டி பாப்பேக்கு மாறாக, டெல்பி டிஜிட்டலின் இணை நிறுவனரும், ஆராய்ச்சித் தலைவருமான கெவின் கெல்லி ஏறுமுகப் போக்கிற்கான ஆரம்ப அறிகுறிகளை ஏற்கனவே கண்டறிந்துள்ளார். இருப்பினும், ஆகஸ்டு 18 அன்று சரிவுக்கு முன்பு இந்த கூர்நோக்கு செய்யப்பட்டது. கெல்லியின் கூற்றுப்படி, பிட்காயின் எல்லா காலத்திற்குமான உச்சமான (ஏடிஎச்) 80% சரிவைத் தொடர்ந்து ஒரு நிலையான கிரிப்டோ சுழற்சி தொடங்குகிறது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அது அதன் முந்தைய எல்லா காலத்திற்குமான உச்சநிலைக்கு மீள்கிறது, மேலும் தொடர்ந்து ஒரு புதிய உச்சத்திற்கு ஏறுகிறது. இந்த தொடர்ச்சி பொதுவாக நான்கு ஆண்டுகள் நீடிக்கும்.

    கெல்லி இந்த முறை சீரற்றது அல்ல, ஆனால் "பரந்த வணிகச் சுழற்சியுடன்" ஒத்துப்போகிறது என்று நம்புகிறார். பிட்காயினின் விலை உச்சம் பெரும்பாலும் ஐஎஸ்எம் உற்பத்தி குறியீட்டுடன் ஒத்துப்போகிறது, இது தற்போது அதன் வீழ்ச்சியின் இறுதி கட்டத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். தற்போதைய நிலைமை கெல்லிக்கு 2015 மற்றும் 2017க்கு இடைப்பட்ட சந்தை நகர்வை நினைவூட்டுகிறது.

    கடந்த இரண்டு பிட்காயின் பங்குகள் சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு, அதன் வரலாற்று உச்சத்தை கடப்பது ஏழு மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்தது என்பதை அவர் எடுத்துரைத்தார். 2024 ஏப்ரலில் அடுத்த பாதியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, நிபுணர்களின் மதிப்பீட்டின்படி, ஆறு மாதங்களுக்குப் பிறகு, டிஜிட்டல் தங்கம் அதன் எல்லா காலத்திற்குமான உச்சத்தை (எடிஎச்) அடையலாம். இருப்பினும், இந்த சூழ்நிலை வெளிவருவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று கெல்லி எச்சரித்தார். அவர் "தவறான கீழ்நிலை" சாத்தியம் பற்றி ஊகித்தார்.

    2024ஆம் ஆண்டில் பிட்காயின் காளை சந்தையை கணிக்கும் இக்னாஸ் எனப்படும் ஒரு பகுப்பாய்வாளரால் இதேபோன்ற சுழற்சி பகுப்பாய்வு நடத்தப்பட்டது. அவரது கணக்கீடு பல ஆண்டுகளாக முதன்மை கிரிப்டோகரன்சி காட்சிப்படுத்திய வடிவத்தை அடிப்படையாகக் கொண்டது: 1. எல்லா காலத்திற்குமான உச்சத்தில் (எடிஎச்) இலிருந்து 80% சரிவு, மிகக் குறைந்த புள்ளி ஒரு ஆண்டு கழித்து (2022, 4வது காலாண்டு). 2. மீட்பு மற்றும் முந்தைய உச்சத்தை அடைய இரண்டு ஆண்டுகள் (2024, 4வது காலாண்டு). 3. புதிய ஏடிஎச் (2025, 4வது காலாண்டு)-க்கு வழிவகுக்கும் விலை வளர்ச்சியின் மற்றொரு ஆண்டு.

    இக்னாஸின் கூற்றுப்படி, கிரிப்டோ துறை 2022-இல் மேக்ரோ பொருளாதார சவால்களை எதிர்கொண்டது, ஆனால் இப்போது நிலைமை மேம்பட்டு வருகிறது. 2024 ஏப்ரலில் பாதியாகக் குறைக்கப்படும் பிட்காயின் உலகளாவிய பணப்புழக்க எழுச்சியுடன் சீரமைக்கப்படலாம், இது எதிர்பார்க்கப்படும் ஏறுமுகப் போக்கைத் தூண்டும். கூடுதலாக, பிட்காயினுக்கான புதிய பயன்பாட்டு வழக்குகள் மற்றும் ஸ்பாட் பிட்காயின் இடிஎஃப்கள் வெளியீடு, எஸ்இசி-ஆல் அங்கீகரிக்கப்பட்டதும், அதன் விலையில் செல்வாக்கு செலுத்தும்.

    பிளான்பி என அழைக்கப்படும் பிரபலமான பிளாக்கர் (பதிவர்) மற்றும் ஆய்வாளர் நடத்திய கருத்துக்கணிப்பில், பதிலளித்தவர்களில் 60% பேர் காளை சந்தையின் தொடக்கத்திற்குப் பின் பாதியாகக் குறையும் என நம்புகின்றனர். இந்த நிகழ்வின்போது, பிடிசி சுமார் $55,000 விலையில் இருக்கும் என்று பிளான்பி தாமே கருதுகிறார். அவரது பிட்காயின் விலை முன்கணிப்பு முன்மாதிரியான எஸ்2எஃப்-இன் சிக்னல்கள், இந்த எண்ணிக்கையை நோக்கி இக்காயினின் சாத்தியமான நகர்வைக் குறிக்கின்றன.

    முதலீட்டாளரும், "ரிச் டேட் புவர் டேட்" என்ற அதிக விற்பனையாகும் நிதியியல் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி மற்றொரு கணிப்பைச் செய்தார். "பிட்காயின் $100,000 நோக்கி செல்கிறது" என்று கியோசாகி நம்புகிறார். "கெட்ட செய்தி: பங்கு மற்றும் பத்திரச் சந்தை வீழ்ச்சியடைந்தால், தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலைகள் உயரும். மோசமானது, உலகப் பொருளாதாரம் சரிந்தால். பிட்காயின் மதிப்பு ஒரு மில்லியனாக இருக்கும், தங்கத்தை $75,000-க்கும் வெள்ளியை $60,000-க்கும் வாங்கலாம். தேசியக் கடன் மிகவும் அதிகமாக உள்ளது. அனைவரும் சிக்கலில் உள்ளனர்" என்று கியோசாகி எழுதினார். ஆனால் அவர் மேலும் கூறினார், ஒரு சந்தர்ப்பத்தில், "நான் தவறு செய்கிறேன் என்று நம்புகிறேன்."

    ஒரு எழுத்தாளர் என்பதற்கு பொருத்தமாக, கியோசாகி தங்கம், வெள்ளி ஆகியவற்றை உருவகமாக "கடவுளின் பணம்" என்றும், பிட்காயினை "மக்களின் டாலர்" என்றும் அழைத்தார். "எங்களுக்கு ஒரு பொதுவான எதிரி இருப்பதால் எனக்கு பிட்காயினைப் பிடிக்கும் – யுஎஸ் மத்திய அரசு, கருவூலம், ஃபெடரல் ரிசர்வ், வால் ஸ்ட்ரீட். நான் அவர்களை நம்பவில்லை. நீங்கள் நம்பினால், டாலர்களை சேகரிக்கவும், உங்களுக்கு ஒரு ஐஓயு கிடைக்கும்," என்று அவர் சொன்னார்.

    ராபர்ட் கியோசாகியின் நிலைப்பாட்டிற்கு மாறாக, பல முதலீட்டாளர்கள் சமீபத்தில் "மக்கள் கரன்சிக்கு" பதிலாக யுஎஸ் டாலரை நோக்கி ஈர்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் டாலரை மிகவும் நம்பகமான பாதுகாப்பான சொத்தாகக் கருதுகின்றனர். டிஎக்ஸ்ஒய் மற்றும் பிடிசி விளக்கப்படங்களை ஒப்பிடும்போது இந்த மாற்றம் தெளிவாகத் தெரிகிறது. இந்த மதிப்பாய்வின் போது, ஆகஸ்டு 18 மாலையில், சந்தை சில நிலைப்படுத்தலுக்கான அறிகுறிகளைக் காட்டியது, பிடிசி/யுஎஸ்டி வர்த்தகம் $26,100-க்கு அருகில் இருந்தது. கிரிப்டோகரன்சிகளின் மொத்த சந்தை மூலதனம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது, இது ஒரு வாரத்திற்கு முன்பு $1.171 டிரில்லியனில் இருந்து $1.054 டிரில்லியனாக பதிவுசெய்து $1 டிரில்லியன் என்ற உளவியல் வரம்பிற்கு மேல் குறுகிய அளவில் பராமரிக்கப்பட்டது. கிரிப்டோ ஃபியர் & கிரீட் இன்டெக்ஸ் சரிவைக் கண்டதில் ஆச்சரியமில்லை, நடுநிலைப் பிரிவில் இருந்து ஃபியர் பகுதிக்கு நகர்ந்து, கடந்த வாரத்தின் 51 புள்ளிகளில் இருந்து 37 இலக்கு புள்ளிகளாக சரிந்தது.  

 

நோர்ட்எஃப்எக்ஸ் (NordFX) பகுப்பாய்வுக் குழு

 

அறிவிப்பு: இந்தத் தகவல்கள் நிதிச் சந்தைகளில் செயல்படுத்துதவற்கான முதலீட்டு பரிந்துரைகளோ அல்லது வழிகாட்டுதல்களோ அல்ல மேலும் வை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. நிதிச் சந்தைகளில் வர்த்தகம் செய்வது ஆபத்தானது மற்றும் டெபாசிட் செய்யப்பட்ட நிதியின் முழுமையான இழப்பை ஏற்படுத்தும்.


« Market Analysis and News

பயிற்சி பெறவும்
சந்தையில் புதியதா? \"தொடங்குதல்\" பகுதியைப் பயன்படுத்தவும். இப்போதே வர்த்தகத்தைத் தொடங்குங்கள்
பயிற்சியைத் தொடங்குங்கள்